பர்தாவை கழற்றிவிட்டு பரீட்சை எழுத நிர்ப்பந்திக்கப்படுகிறோம்

மட்டக்குளியில் மாணவிகள் தெரிவிப்பு
பர்­தாவை கழற்றி மேசையில் வைத்­து­விட்டு கல்விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண பரீட்­சை எழுத நிர்­ப்பந்­திக்­கப்­ப­டு­கிறோம் என மட்­டக்­குளி டிலசல் ஆண்கள் கல்­லூ­ரியில் அமைக்­கப்­பட்­டுள்ள பரீட்சை நிலை­யத்தில் பரீட்­சைக்கு தோற்றும் 10 க்கும் மேற்­பட்ட முஸ்லிம் மாண­விகள் அமைச்சர் பைஸர் முஸ்­த­பாவின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­துள்­ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
மட்­டக்­கு­ழியைச் சோந்த 10 க்கும் மேற்­பட்ட முஸ்லிம் மாண­விகள் வெளி­வா­ரி­யாக பரீட்­சைக்குத் தோற்­று­கின்­றனர்.

இது­வரை 5 நாட்­க­ளாக நடை­பெற்ற பரீட்­சை­யின்­போது மண்­ட­பத்­திற்குள் தங்­க­ளது தலையில்  அணியும் பர்­தாவை கழற்றி மேசையில் வைத்து விட்டே பரீட்சை எழுத கட­மையில் இருக்கும் அதி­கா­ரி­களால் நிர்ப்­பந்­திப்­ப­டு­வ­தாக தெரி­வித்­துள்­ளனர். 

பரீட்சை நிலை­யத்தின் கட­மை­யுள்ள பிர­தான பரி­சோ­த­கரே இதனைக் கண்­டிப்­பாக நடை­மு­றைப்­ப­டுத்­தினார். கொழும்பு - 15 டிலசல் ஆண்கள் கல்­லுா­ரி­யி­லேயே பரீட்­சைக்கு தோற்றும்  சகல முஸ்லிம் மாண­வி­களும் இவ்­வாறு நிர்­பந்­திக்­கப்­ப­டு­கின்­றனர்.

குறித்த மண்­ட­பத்­திற்குள் ஆண்­மா­ண­வர்கள் இருப்­ப­தனால் தாம் அசெ­ள­க­ரியம் ஏற்­ப­டு­வ­தா­கவும் பரீட்சை எழுதும் மன­நிலை அற்­றுப்­போ­வ­தா­கவும் அவர்கள் தெரி­வித்­துள்­ளனர். 

இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக அமைச்சர் பைசர் முஸ்­தபாவின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­த­தை­யிட்டு அவர் சம்­பந்­தப்­பட்ட பரீட்சை ஆணை­யாளர், கல்­வி­ய­மைச்சர் ஆகி­யோரின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­துள்ளார். 

ஏற்­க­னவே கல்­வி­ய­மைச்சா் இதனை அறி­வித்து  கல்­வி­ய­மைச்சோ பரீட்சைத் திணைக்­க­ளமோ தமது பரீட்சை பரி­சோ­த­கர்க­ளுக்கு சுற்­ற­றிக்கை மூலம் தெரி­விக்­க­வில்லை. இப்­பி­ரச்­சி­னைகள் ஒரு சில இடங்­க­ளி­லேயே நடை­பெற்­றுள்­ளது.

பர்­தா­வுக்குள் பிரதிகளை வைத்துக் கொண்டு பார்த்து  எழுதலாம் என்ற ரீதியிலே பரிசோதகர் இதனைக் கருதுகின்றனர். இவ்விடயம் சம்பந்தமாக தான் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

Comments