நாட்டின் நன்மைக்காக இன நல்லிணக்கத்துக்காக சிறைவாசம் செல்லவும் தயாராக இருக்கிறேன்
கலகொட அத்தே ஞானசார தேரர்
நாட்டில் சகவாழ்வும் நல்லிணக்கமும் தேசிய ஒருமைப்பாடும் உருவாகுவதற்கு என்னைக் கைது செய்ய வேண்டுமென்றால் கைது செய்யுங்கள்.
நாட்டின் நன்மைக்காக, இன நல்லிணக்கத்துக்காக நான் சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன் என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
முஸ்லிம் அமைச்சர்களும். எம்.பி. க்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து ஞானசார தேரரை கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
நான் முஸ்லிம்களுக்கு எதிரானவன். குழப்பங்களுக்கு காரணமானவன் என்று முஸ்லிம் அமைச்சர்களும் எம்.பி. க்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.
கலந்துரையாடியிருக்கிறார்கள். என்னைப் பற்றித் தவறாகக் கூறியிருக்கிறார்கள். என்னைக் கைது செய்யும் படியும் தெரிவித்திருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்வதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியுமென்றால் அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். சிறை செல்லவும் தயார் நிலையில் உள்ளேன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வமதத் தலைவர்கள் மற்றும் மதங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திய போதும் நானும் அதற்கு அழைக்கப்பட்டமை தவறானது என முஸ்லிம் எம்.பிக்கள் கூறியிருக்கிறார்கள். பிரச்சினைகளை கலந்துரையாடல்கள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும்.
பிரச்சினைக்குரியவர் அழைக்கப்பட்டு அவருடனும் கலந்துரையாடப்பட வேண்டும். இந்த அடிப்படையிலே நான் அங்கு அழைக்கப்பட்டேன்.
நான் அங்கு அழைக்கப்பட்டமைக்கு முஸ்லிம் எம்.பி. க்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். ஏன் அவர்களுக்கு இடையில் இந்தக் குழப்பம் என்று தெரியவில்லை.
கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக் கொள்ள முஸ்லிம்கள் விரும்பவில்லையா? ஜனாதிபதி நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிறந்ததோர் வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
புத்த பெருமான் போதித்த கருணை, அகிம்சையையே நாம் கடைப்பிடிக்கிறோம். நாம் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
சகவாழ்வுக்கும் நல்லிணக்கத்துக்கும் புரிந்துணர்வுகளே அத்தியாவசியமாகும்.
ஜனாதிபதி ஏற்படுத்தித் தந்துள்ள சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Comments
Post a Comment