கடற்படை தளபதி தொடர்பாக விசாரணை ஆரம்பம்!

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசாங்கம் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
அதற்கமையய குறித்த சம்பவத்தின் போது மோதல் நிலைமைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய ஒழுக்க நெறிகளை குறித்த ஊடகவியலாளர் பின்பற்றியிருக்கவில்லையென ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம்தெரிய வந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊழியர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கடற்படை தளபதியினால் அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments