தங்கை தனது அண்ணணின் கை விரலை கடித்து துண்டாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி


(ihzana fareed)
திருகோணமலை-மொறவெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் தங்கை தனது அண்ணணின் கை விரலை கடித்து துண்டாக்கிய நிலையில் இன்று (22) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு தங்கையின் கடிக்கு இலக்கானவர் மஹதிவுல்வெவ.சாந்திபுரம் பகுதியைச்சேர்ந்த பெருமான் செல்வநாயகம் (47வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது-தங்கையின் கணவருடன் அண்ணாவான பெருமான் செல்வநாயகம் தொடர்ச்சியாக மது அருந்தி வருவதாகவும் மது அருந்துவதற்கு செல்ல வேண்டாம் என மனைவியான பெருமான் மகேஸ்வரி கூறியதையடுத்து இருவருக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனையடுத்து தங்கையான மகேஸ்வரி அண்ணணுடைய வலது கை விரலை கடித்து துண்டாக்கியதாகவும் ஆரம்ப விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

தனது கை விரலை கடித்து துண்டாக்கியதாக தெரிவித்து திருகோணமலை பொது வைத்தியசாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

கைவிரலை கடித்தமை தொடர்பில் விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments