உறுப்பினர்களுக்கான வாகனம் வழங்கும் திட்டம் இடைநிறுத்தம்!
வாடகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்கும் திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆண்டு ஒன்றுக்கு ஏழு கோடி ரூபா செலவிட்டு கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த வாகனம் வழங்கும் நடவடிக்கை குறித்த ஆவணத்தில் நாடாளுமன்ற மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் இதுவரை கையொப்பமிடவில்லை.
இதுவே வாகனம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்படக் காரணமாகும்.
சட்ட சிக்கல்களினால் வாகனம் வழங்குவது குறித்த ஆவணத்தில் கையொப்பமிட முடியாது என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றின் பதவிக் காலம் 45 மாதங்களாக காணப்படும் நிலையில் 60 மாதங்களுக்கு வாடகை வழங்க பரிந்துரை செய்தல், நிதிக் கொடுப்பனவிற்கான ஒதுக்கம் பற்றி தெளிவாக குறிப்பிடாமை உள்ளிட்ட பல காரணிகளில் சிக்கல்கள் காணப்படுவதனால் அனுமதி வழங்கப்பட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது

Comments
Post a Comment