Skip to main content
மாளிகாவத்தை மையவாடிவிவகாரம்: கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்
கொழும்பு – மாளிகாவத்தை மையவாடிக் காணியை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் மீட்டெடுத்துக் கொள்வதற்காகவும் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்பு கொழும்பு மாநகர சபை கட்டடத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவையும் மீறி தனியார் நிறுவனமொன்று முஸ்லிம் மையவாடிக் காணியில் 8 மாடிக் கட்டடமொன்று நிர்மாணித்து வருகின்றமை, மையவாடிக்கருகில் உள்ள மின்மாற்றியை மையவாடிக் காணிக்குள் நிறுவுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளமை, மாநகர சபையினால் சட்ட விரோதக் கட்டடத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டமை என்பவற்றிற்கு எதிராக இன்று இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொழும்பு மாநகரசபை ஆணையாளர் வி.கே.ஏ.அநுரவுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தை மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனம் ஒழுங்கு செய்துள்ளது.ஆர்ப்பாட்டம் ஜும்ஆ தொழுகையின் பின்பு தெமட்டஹக ஜும்ஆ பள்ளிவாசலிலிருந்து ஆரம்பமாகி கொழும்பு மாநகர சபை கட்டடத்தை சென்றடையவுள்ளதாக மாளிகாவத்தை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஷியாம் அசார் தெரிவித்தார்.
Comments
Post a Comment