மஹிந்த ‘சீடர்களால்’ பொது மக்களுக்கு இடைஞ்சல்: ரணில்!

மஹிந்தவின் சீடர்களால் பொது மக்களுக்கு பாரிய இடைஞ்சல்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
நாடாளுமன்றை சுற்றிவளைத்துப் போராட்டம் நடாத்த முனைந்தவர்கள் ஒழுக்கசீலர்கள் இல்லையெனவும் பல குற்றச்சாட்டுகளில் தொடர்பு பட்டவர்களே எனவும் கூட்டு எதிர்க்கட்சியினரின் அண்மைய நடவடிக்கை குறித்து விசனம் வெளியிட்டுள்ள பிரதமர், இவர்களின் நடவடிக்கை பொது மக்களளுக்கு பாரிய இடைஞ்சலாக உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
3ம் திகதி நாடாளுமன்றம் அருகே இவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற அதேவேளை ஞானசார குழுவினர் மட்டக்களப்பு நோக்கி சென்றிருந்தமையும் வெலிகந்தையில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments