Skip to main content
திருகோணமலையிலிருந்து – தங்கல்லை நோக்கி புறப்பட்டுச்சென்ற பஸ்ஸுக்கு தாக்குதல் ; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
திருகோணமலையிலிருந்து – தங்கல்லை நோக்கி புறப்பட்டுச்சென்ற அரச போக்குவரத்துக்கு சொந்தமான பஸ்ஸுக்கு இன்றிரவு 9: 40 மணியளவில் இனந்தெரியாதோரினால் ( 01) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (01) இரவு 9:30 மணிக்கு புறப்பட்ட WP-ND-9850 எனும் இலக்க திருகோணமலை போக்குவரத்து சாலைக்கு சொந்தமான பஸ்ஸுக்கு காளி கோயிலுக்கு அருகில் வைத்து கண்ணாடிகள் தாக்கி உடைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
(ihzana fareed)
Comments
Post a Comment