குச்சவெளி : மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
(ihzana fareed)
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி மற்றும் இரக்கக்கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தெரிவு செய்ய பட்ட மாற்றுத் திறனாளிகள் 12 பேருக்கு இன்று சனிக்கிழமை இரக்கக்கண்டி அல்ஹம்றா மகா வித்தியாலயத்தில் வைத்து வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாக முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.றமீஸ் தெரிவித்தார்.
ஒவ்வொருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் ,முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் அப்துல் சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Comments
Post a Comment