அனுரவின் விளக்கமறியல் நீடிப்பு.!

றகர் வீரர் வஸீம்  தாஜுதின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இதன்போது நீதிமன்றத்தில் தகவலளித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இந்தக் கொலை தொடர்பாக இன்னும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 

இதேவேளை, தாஜூடினின் சகோதரரிடம் வாக்குமூலம் பெறவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அனுமதி கோரிய நிலையில் நீதவானும் அதற்கு அனுமதியளித்துள்ளார்.

Comments