ஞானசார தேரர் மகிழ்ச்சி ! ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

நீண்ட நாட்களாக விடை தேடிக்கொண்டிருந்த பல பிரச்சினைகளுக்கான  தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை கடந்த சில நாட்களுக்குள் நடந்த விடயங்கள் ஊடாக தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் அதற்காக  ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்..

கிழக்கில் சிறுபான்மையாக வாழும் சிங்களவர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து அங்கு மறுக்கப்பட்டு வந்துள்ளது. அவர்களுக்கு பிறப்பு ,இறப்பு சான்றிதல்களை கூட பெறமுடியாத நிலை இருந்துவந்துள்ளது. மேலும் அங்கு தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் முஸ்லீங்களாலும் தமிழர்களாலும் சேதமாக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நாம் கடந்த காலங்களில் தொடர்ந்து கூறி வந்த போதும் அது பேச்சோடு முடிந்துவிட்டது.

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது . அதில் திருகோணமலை , மட்டக்களப்பு , அம்பாரை ஆகிய மூன்று மாவட்டங்களில் 59 இடங்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டுக்கு மாத்திரமே தற்போது வர்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசுக்கு தாங்கள் கொடுத்துள்ள அழுத்தம் காரணமாக விரைவில் அரச அதிகாரிகள் இனங்காணப்பட்டுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை வர்தமானி அறிவித்தலை வெளியிடும் பணியை மேற்கொள்வார்கள் என சுட்டிக்காட்டியுள்ள அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments