குர்ஆனை தெருக்களில் விமர்சிக்காதீர் சந்தேகங்களை எம்மிடம் கேளுங்கள் – ஜனாதிபதி முன் ஞானசாரவுக்கு ரிஸ்வி முப்தி

புனித குர்ஆன் கரு­ணை­யையும் அன்­பை­யுமே போதிக்­கி­றது. ஏனைய மதங்­களை நேசிக்கும் படியே கூறி­யுள்­ளது. இஸ்லாம் சம்­பந்­த­மான விட­யங்­களை, குர்­ஆனை தெருக்­களில் விமர்­சிக்­கா­தீர்கள். விளக்­கங்கள் தேவை­யென்றால் எம்­மிடம் கேளுங்கள்.
பிரச்­சி­னை­களைக் கலந்­து­ரை­யாடல் மூலம் தீர்த்துக் கொள்ள முன்­வா­ருங்கள். இது எமது தாய்­நாடு. நாம் நாட்டு பற்­றுள்­ள­வர்கள், சமா­தா­னத்தை விரும்­பு­ப­வர்கள் என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி பௌத்த மதத் தலை­வர்­க­ளிடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் வேண்­டுகோள் விடுத்தார்.
நேற்று முன்­தினம் மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற சர்­வ­மதத் தலை­வர்கள் மற்றும் மத விவ­கார அமைச்­சர்கள், கலந்­து­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான கலந்­து­ரை­யா­டலில் உரை­யாற்­று­கை­யிலே உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி இவ்­வா­றான வேண்­டு­கோளை விடுத்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;
முஸ்­லிம்கள் நாம் அமை­தியை விரும்­பு­ப­வர்கள். புரிந்­து­ணர்­வுடன் வாழ்­ப­வர்கள். எங்கள் மீது நீங்கள் சந்­தே­கப்­ப­டு­கி­றீர்கள் என்றால் சந்­தே­கங்­க­ளுக்­கான தெளி­வு­களைப் பெற்­றுக்­கொள்ள வேண்டும். வீணாக குர்­ஆ­னையும் முஸ்­லிம்­க­ளையும் எமது கலா­சா­ரங்­க­ளையும் விமர்­சித்து அவ­ம­தித்துக் கொண்­டி­ருந்தால் நாட்டில் நல்­லி­ணக்கம் உரு­வாக மாட்­டாது.
முஸ்­லிம்கள் நாட்டின் சட்­டத்­துக்கு கட்­டுப்­பட்டு வாழ்­ப­வர்கள். நாம் தீவி­ர­வா­தி­க­ளல்ல. தீவி­ர­வாத இயக்­க­மான ஐ.எஸ் அமைப்­புடன் எம்மை தொடர்­பு­ப­டுத்தி குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. இலங்­கையில் ஐ.எஸ் அமைப்­புக்கு எதி­ராக குரல் கொடுத்­தது உலமா சபையே இஸ்லாம் தீவி­ர­வா­தத்தை எதிர்க்­கி­றது. மனி­த­ப­டு­கொ­லையை இஸ்லாம் ஆத­ரிக்­க­வில்லை.
2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6 ஆம் திகதி இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தில் ஐ..எஸ். அமைப்பைக் கண்­டித்து என்னால் உரை­யாற்­றப்­பட்­டது. அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஊடக அறிக்­கை­யொன்றும் வெளி­யி­டப்­பட்­டது. ஐ..எஸ் அமைப்பு இஸ்­லா­மிய அடிப்­ப­டை­க­ளுக்கு முர­ணாக செயற்­ப­டு­கின்ற அமைப்பு என நாம் தெளி­வாகக் குறிப்­பிட்­டுள்ளோம். என்­றாலும் ஐ..எஸ். உடன் தொடர்ந்தும் எம்மை சம்­பந்­தப்­ப­டுத்­து­கி­றார்கள்.
எமக்­கி­டையே பிரச்­சி­னைகள் இருந்தால் பேச்­சு­வார்த்­தைகள் மூலமே தீர்த்­துக்­கொள்ள வேண்டும். சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­களைப் பற்றி புகழ்ந்து புத்­த­கங்கள் எழு­தி­யுள்­ள­மையை இங்கு நான் குறிப்­பிட்­டாக வேண்டும். கரு­ணா­ரத்ன ஹேரத் முஸ்லிம் நீதிய (முஸ்லிம் சட்டம்) என்று புத்­தகம் ஒன்று எழு­தி­யுள்ளார் ஐ.எஸ் தீவி­ர­வா­தத்தை நாம் ஆத­ரிக்­க­வில்லை. இலங்­கை­யரில் ஐ..எஸ் தீவி­ர­வா­திகள் இருந்தால் சட்­டத்தை கடு­மை­யாக அமுல்­ப­டுத்­துங்கள்.
ஷரீஆ சட்டம் ஒரு தீவி­ர­வாத சட்­ட­மல்ல. அது அல்­லாஹ்வின் சட்டம் ஷரீஆ தெளி­வு­களை நாம் உங்­க­ளுக்கு வழங்கக் காத்­தி­ருக்­கின்றோம். நாம­னை­வரும் வேறு­பா­டு­களை மறந்து இலங்­கை­யர்கள் என்ற அடிப்­ப­டையில் ஒன்­று­ப­ட­வேண்டும். நல்­லி­ணக்­கத்தின் பங்­கா­ளர்­க­ளாக மாற­வேண்டும். என்றார்.
ஞானசார தேரர்
நாங்கள் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்­க­ளையோ, தமி­ழர்­களின் கோவில்­க­ளையோ தாக்­க­வில்லை. பௌத்த சம­யத்­துக்கு ஏனைய சம­யத்­த­வர்­களை மதம் மாற்­ற­வில்லை நாம் நல்­லி­ணக்­கத்­தையே விரும்­பு­கிறோம். பௌத்தம் நல்­லி­ணக்­கத்­தையும், கரு­ணை­யை­யுமே போதிக்­கி­றது என பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் கல­பொட அத்தே ஞான­சார தேரர் நேற்று முன்­தினம் சர்­வ­மதத் தலை­வர்­களை விளித்துப் பேசு­கையில் குறிப்­பிட்டார்.
என்­றாலும் முஸ்­லிம்கள் தங்­க­ளது புனித தலங்­க­ளாகக் கொண்­டுள்ள இடங்கள் தொடர்பில் சில சிக்­கல்கள், பிரச்­சி­னைகள் இருப்­ப­தா­கவும் அவர் கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;
பௌத்த மர­பு­ரி­மைகள் ஏனைய மதத்­த­வர்­களால் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன. எமது பாரம்­ப­ரிய பௌத்த வர­லாற்­றுக்கு சான்­றா­க­வுள்ள தொல்­பொருள் பிர­தே­சங்கள் முஸ்­லிம்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளன. கூர­கல, தெவ­ன­கல, முகுது மகா­வி­காரை, புனித பூமி காணிகள் முஸ்­லிம்கள் வச­முள்­ளன.
இவை தொல்­பொருள் ஆய்வு பிர­தே­சங்­க­ளாகும். இந்த ஆக்­கி­ர­மிப்­பு­க­ளுக்கு எதி­ராக தொல்­பொருள் சட்டம் அமு­லாக்­கப்­ப­ட­வேண்டும் எனக் கோரு­கிறோம்.
முகுது மகா­வி­கா­ரைக்குச் சொந்­த­மான காணி 276 ஏக்­கர்­க­ளாகும். இந்த 276 ஏக்­கர்­களில் 3 ஏக்­கர்­களைத் தவிர எஞ்­சிய காணி முஸ்­லிம்­களால் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன.
அக்­கா­ணியில் முஸ்­லிம்கள் வீடு­களை நிர்­மா­ணித்­துள்­ளார்கள். முகுது விகாரை பன்­ச­லைக்கு செல்­வ­தற்­கான பாதையும் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது. மூடப்­பட்­டுள்­ளது. தற்­போது பன்­ச­லைக்கு செல்­வ­தற்கு கட­லோரப் பாதையே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. முகுது விகாரை பன்­ச­லைக்­கான பெயர் பல­கையும் அப்­ப­குதி மாற்று இனத்­த­லை­வர்­களால் சிதைக்­கப்­ப­டு­கி­றது. தொல்­பொருள் பிர­தே­சங்கள் இவ்­வாறு கையா­ளப்­ப­டு­வது தொல்­பொருள் சட்­டத்­தினால் பாது­காக்­கப்­ப­ட­வேண்டும். என்றார்.
சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர்.
சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் உரை­யாற்­று­கையில்;
இன்று நாட்டில் பௌத்­தத்­துக்கும், பௌத்த மக்­க­ளுக்கும் பல சவால்கள் உரு­வா­கி­யுள்­ளன. பௌத்­தர்கள் ஏனைய மதங்­க­ளுக்கு மதம் மாற்­றப்­ப­டு­கி­றார்கள். ஆனால் நாம் எவ­ரையும் எந்த மதத்­தி­ன­ரையும் பௌத்­தத்­துக்கு மதம் மாற்­ற­வில்லை. இன்று பௌத்த மத உரி­மைகள், வர­லாற்று பிர­தே­சங்கள் கிழக்கில் முஸ்­லிம்­களால் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன.
கண்­டியில் பள்­ளிரோட் எனும் பெயர்க்கல் எம்மால் உடைக்­கப்­பட்­ட­தாக கூறு­கி­றார்கள். ஆனால் இந்த பள்­ளிரோட் என்ற பாதை முன்பு எஹ­ல­பொல குமா­ரி­ஹாமி என்ற பெய­ரிலே இருந்­தது. இப்­பெ­யரே பள்­ளிரோட் என்று மாற்­றப்­பட்­டது.
எஹ­ல­பொல குமா­ரி­ஹாமி மத்­தும பண்­டா­ரவின் தாயா­ராவார். அன்று பெயர் மாற்­றப்­பட்ட போது நாம் எதிர்க்­க­வில்லை. அன்று எமக்குள் நல்­லு­றவு இருந்­தது. நாம் ஒற்­று­மை­யா­கவே வாழ்ந்தோம். பிரச்­சி­னைகள் இருக்­க­வில்லை.
ஆனால் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளி­டையே வஹா­பிஸம் பரப்­பப்­பட்­டதன் பின்பே பிரச்­சி­னைகள் உரு­வா­கின. முஸ்லிம் பெண்கள் கண்­களை மாத்­திரம் மறைக்­காது முழு உட­லையும் மறைத்துக் கொள்­கி­றார்கள்.
இவர்கள் யார்? ஆணா? பெண்ணா? என்று அடை­யாளம் காண­மு­டி­யா­துள்­ளது. நாட்டில் அடை­யாள அட்டை அமுலில் இருப்­பது நபர்களை அடையாளம் காண்பதற்கல்லவா? ஷரீஆ சட்டமும் விமர்சனத்துக்குரியதே. பெண்களின் திருமண வயதெல்லை ஆகக்குறைந்தது 12 என ஷரீஆ சட்டம் கூறுகிறது. இதனை அனுமதிக்க முடியாது. பௌத்த நாட்டில் இவ்வாறான சட்டங்களுக்கு இடமளிக்கக்கூடாது.
பௌத்தர்கள் பலாத்காரமாக சில சலுகைகளை வழங்கி மதம் மாற்றம் செய்யப்படுகிறார்கள். இலங்கையில் மதமாற்றம் தடைசெய்யப்படவேண்டும் என்றார்.
கலந்­து­ரை­யா­டலில் அமைச்­சர்கள் எம்.எச்.ஏ.ஹலீம், ஜோன் அம­ர­துங்க, விஜே­தாச ராஜபக் ஷ மற்றும் பௌத்த மதத் தலை­வர்கள் தரப்பில் பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் கல­பொட அத்தே ஞான­சார தேரர், சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் அதன் செய­லாளர் மாகல்­கந்தே சுதந்த தேரர் உட்­பட்ட குழு­வி­னரும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் சார்பில் உல­மா­சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ..எம்.ரிஸ்வி முப்தி தலை­மை­யி­லான குழு­வி­னரும் தேசி­ய­சூரா சபையின் சார்பில் அதன் தலைவர் தாரிக் மஹ்மூத் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எச்.எம்.ஸமீல் உட்­பட பலர் கலந்து கொண்­டனர். இந்து சமயத் தலை­வர்­களும் கிறிஸ்­தவ மதத் தலை­வர்­களும் இதில் பங்கு கொண்­டி­ருந்­தனர். மகா­நா­யக்க தேரர்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.
நாட்டில் தற்போது மதங்களுக்கிடையிலும், இனங்களுக்கிடையிலும் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விரிவாக ஆராய சர்வ மதத் தலைவர்கள் அடங்கிய விஷேட குழுவொன்றினை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளார். இக்குழு மாதத்துக்கு இருமுறை ஒன்றுகூடி பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென ஜனாதிபதி மதத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Comments