பொதுபலசேனவுக்கு நான் எழுதும் பகிரங்கமடல்


வரலாற்று ரீதியாக முஸ்லிம் சிங்கள சமூகம் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வந்ததுதான் வரலாறு . இந்த வரலாற்றை அடியோடு அழித்து முஸ்லிம் சிங்கள கலவரத்தை உருவாக்கி கரைபடிந்த புதிய வரலாற்றை ஆரம்பிக்கும் முயற்சியை அடியோடு விட்டுவிட வேண்டும்
அரசியல்,கல்வி,கலை, கலாசார  பண்பாட்டு விடயங்களில் நாங்கள் புட்டும் தேங்காய் பூவைப் போல் ஒன்றித்து பல சாதனைகளை இதுவரை இரண்டு சமூகமும் சேர்ந்து நிலைநாட்டி இருக்கின்றோம் என்பதனை இந்த நேரத்தில் பணிவாக எடுத்துக் கூற விரும்புகிறேன்
முஸ்லிம் சிங்கள சமூகத்தின் உணர்வுகளை தூண்டி ஆடத்தெரியாத மேடையில் அரங்கேற்றும்  உங்கள் கபட நாடகத்தினை விட்டுவிட்டு இரண்டு சமூகமும் சேர்ந்து நாட்டை கட்டியெழுப்ப நீங்களும் தோளோடு தோள் கொடுத்து நல்லாட்சியின் பங்காளியாகுங்கள் என்பதனை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
றபீக் சர்றாஜ்
மூதூர்

Comments