தோப்பூர்: கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு



(ihzana fareed)
தோப்பூர் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது.

தோப்பூர் வை.எம்.ஏ அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந் நிகழ்வில் 40 மாணவர்களுக்கு தலா 1000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக குறித்த அமைப்பின் தலைவர் வீ.ஆஸாத் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபையின் முன்னால் தவிசாளரும் மத்திய சுகாதார பிரதி அமைச்சரின் இணைப்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் கலந்து கொண்டார்.விசேட அதீதிகளாக நௌபால்டீன் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.நௌபால்டீன், தோப்பூர் நூரிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் எம்.நஜீம் (மௌலவி) ,தோப்பூர் ஸாஹிரா வித்தியாலய அதிபர் ஏ.பீ.எ.ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments