மிக முக்கியாமன சிறுகதையும் கவிதையும்---தொண்ணூறில் எங்கள் கல்குடா .... மீராவோடை சுபைர்
(ihzana fareed)
கல்குடா பிரதேசமானது 1990ம் ஆண்டைய யுத்தகாலப்பகுதியில் எவ்வகையான இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது என்பதனை சிறுகதையாக எழுதியுள்ள ஓட்டமாவடி மீராவோடை சுபைர் அதற்கு வலுச்சேர்கும் வகையில் உதவி அரசாங்க அதிபர் வை.அஹமட்டின் கொலையினை ஞாபகப்படுத்தி உணர்ச்சியுடன் பாடும் கவிதையின் காணொளி இங்கே எமது வாசகர்களுகாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொண்ணூறில் எங்களூர்
ஆயுதக் குழுவின் கை ஓங்கியிருந்த காலம். வாழைச்சேனை, கல்குடா பொலிஸ் நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸார் அனைவரையும் சரணடையுமாறு புலிகள் ஒலி பெருக்கி மூலம் அறிவித்துக் கொண்டிருந்தனர். அத்தோடு ஊருக்குள் புலிகள் இது இறுதிப்போர் தமிழ் ஈழம் அமைக்க தயாராகி விட்டோம். எல்லோரும் வந்து எங்களோடு இணைந்து கொள்ளுங்களென்று அறைகூவல் விடுத்துக் கொண்டிருந்தனர்.
பொலீஸார் அனைவரும் சரணடைந்து விட்டனர்.
அவர்கள் அனைவரையும் இரண்டு பஸ்களில் ஏற்றி வந்து ஒரு பெரிய வீட்டுக்குள் அடைத்து வைத்தனர். பொலிஸ் நிலையத்திலிருந்த சகல ஆயுதங்களையும், பொருட்களையும் இன்னும் ஒரு குழுவினர் ஏற்றிக் கொண்டு அங்கிருந்த ஜீப் போன்ற வாகனங்களையும் கொண்டு சென்றனர்.
இது போன்று கல்குடா, கும்புறுமூலை இராணுவமுகாம்களிலிருந்த இராணுவத்துக்கு சில மணி நேரம் அவகாசம் கொடுத்து சரணடையுமாறும் இல்லையேல் தாக்குதல் நடாத்தப் போவதாகவும் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இரண்டு இராணுவ முகாம்களும் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டு தாக்குதலுக்கு தயாராய் இருந்தது. இராணுவம் சரணடையாமல் முகாம்களுக்குள் முடங்கியது.
சரணடைந்த பொலீஸாரை பஸ்ஸில் ஏற்றிக் கொண்டிருந்தனர். ஏற்றும் போது அவர்களது கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், கைக்கடிகாரங்கள் என்பன பறிக்கப்பட்டு கைகள் கட்டப்பட்டு மிகப்பரிதாபகரமான நிலையில் கொண்டு சென்றனர். அவர்களது இறுதிப்பயணம் அதுதான். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக செய்தி பரவியது.
திடீரென வெடிச்சத்தம் இரண்டு இராணுவ முகாம்களும் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பல புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டு கொண்டுவரப்பட்டனர். காயமடைந்த சிலபேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலை பல நாட்களாக தொடர்ந்தது. முகாமைக் கைப்பற்ற புலிகளால் முடியவில்லை. கல்குடா இராணுவ முகாமை நோக்கி கடல் வழியாக கடற்படை வந்து புலிகளை தாக்கத் தொடங்கியது. புலிகள் நிலை குலைந்து போனார்கள். கல்குடா இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினர் கடல்படை உதவியுடன் தப்பி கடல் வழியாக போய்விட்டதாக ஊருக்குள் பேசிக் கொண்டனர்.
கும்புறுமூலை இராணுவம் சளைக்காமல் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது. புலிகளால் முகாமை நெருங்க முடியவில்லை. இப்படியாக பல நாட்கள் கடந்து கொண்டிருந்தது. புலிகளின் வால்கள் என்றழைக்கப்பட்ட சில பேர் முகாமை பிடித்து விட்டதாக வதந்தியை பரப்பிக் கொண்டிருந்தனர். அம்மான் குரூப் ரெஜி தலைமையில் இறங்கி விட்டதாகவும் இன்றைக்கு முகாம் புலிகள் கைக்கு வந்து விடுமென்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர். கடைசி வரைக்கும் இவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.
எங்கு பார்த்தாலும் எந்நேரமும் வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. மீராவோடை மார்க்கட் மூடப்பட்டிருந்தது. சனங்களுக்கு அளகுழப்பம் என்ன செய்வதென்று தெரியாமல் கூட்டம் கூட்டமாய் கூடி நின்று கொண்டு வாயில் வந்தெல்லாத்தையும் பேசிக் கொண்டிருந்தனர். காலையில் கூடுவதும் இரவில் கலைவதுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. வெடிச்சத்தம் மட்டும் ஓயாது கேட்டுக் கொண்டே இருந்தது. திடீரென ஒரு நாள் அதிகாலைவேளை ஊருக்குள் செல் வீச்சு தடம்புரண்டது ஊர். குண்டு வீச்சு விமானம் குண்டு வீசுக் கொண்டிருந்தது.
ஹெலிகொப்டர் இரண்டு மேலிருந்து ஊர் மக்கள் படபடவென்று சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்தது. அல்லோலகல்லோலமாய் ஊர் மக்கள் ஊரிலுள்ள மக்கள் கட்டிடங்களுக்குள் மறையத் தொடங்கினர். ஆமி வருது ஆமி வருது என்று சிலபேர் சொல்லிக் கொண்டர். பல புலிகள் ஓட்டமாவடியில் நின்று கொண்டு எல்லோரும் ஓடுங்க நாங்க பொறி வெடி (மிதி வெடி) வைக்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். கூடியிருந்த மக்களெல்லாம் கலைந்து சென்றனர். அன்றிரவு யாருமே அங்கு இல்லை. அங்கிருந்த கடைகளையெல்லாம் கொள்ளையடித்து சகல பொருட்களையும் ஏற்றிக் கொண்டு இரவோடு இரவாக புலிகள் தலைமறைவாகினர். காலையில் போய்ப் பார்த்தால் வெறும் பழைய மீன்டின்கள் பலதைப் புதைத்து விட்டு சென்றிருந்தனர். ஓட்டமாவடிப் பாலத்தில் கிளைமோர் ஒன்றை புலிகள் பொருத்தியிருந்தனர். ஆமிக்கவச வண்டி ஒன்று திடீரென்று வந்து கிளைமோர் தாக்கியது. பெருஞ்சத்தமாக வெடித்துச் சிதறியது.
அதிகாலை வேளை தாக்குதலை இராணுவம் மீண்டும் தொடர்ந்தது. மக்கள் சிதறி ஓடத் தொடங்கினார்கள். அவ்வேளை மர்ஹூம் கொமைனி சின்னத்தம்பி வெள்ளைக் கொடியொன்றை தூக்கிக் கொண்டு இராணுவம் வரும் திசையை நோக்கி (நாவலடிப்பக்கம்) மிகவேகமாக போய்க் கொண்டிருந்தார். இவரோடு இன்னும் சிலரும் பின்னால் தொடர்ந்தனர். சில மணிநேரத்தில் வெடிச்சத்தம் ஓய்ந்தது.
இராணுவம் எதுவித அசம்பாவிதமுமின்றி ஊருக்குள் நுழைந்தது. வந்த இராணுவம் சற்று களைப்பாறி விட்டு கும்புறுமூலையை நோக்கி போய்க் கொண்டிருந்தது. இராணுவம் வரும் செய்தியை புலிகள் அறிந்ததும் முகாமை விட்டு பின்வாங்கி சென்று விட்டனர். கும்புறுமூலைக்கு சென்ற இராணுவம் அங்கிருந்த இராணுவ வீரர்களை மீட்டு அனுப்பி வைத்தனர். வந்த இராணுவம் முகாமை முற்றாக அழித்து விட்டு இரவோடு இரவாக சென்றுவிட்டது.
பழைய குருடி கதவைத்திறடி என்ற கதை போல மீண்டும் புலிகள் ஊருக்குள் வந்து விட்டனர். எந்நேரமும் ஏதாவது நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் எங்களுக்கிருந்தது. பள்ளிவாயல் உள் வீதியில் ஒரு தேநீர் கடை எஸ்.எம் ஹோட்டல் என்று அதற்குப் பெயர். அதற்குள் நாங்கள் பல பேர் கூடி பேசிக் கொண்டிருப்போம் எல்.ரீ.ரீ.ஈ செய்யும் அநியாயங்களைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருப்போம்.
திடீரென உள்ளே புகுந்தான் முஸ்தபா எனு் ஒரு புலி. என்னையும், யூசுப்பையும் முறைத்துப் பாரத்தான் திகைத்துப் போனோம். உங்க ரெண்டு பேருக்கும் வாய் கூட. மண்டைல போடுவன். என்றான். கடுமையாக எங்களை எச்சரித்தான். ஹோட்டல் காரனையு் எச்சரித்தான். எல்லாருக்கும் இரிக்கி வேல என்றான். தேநீர் குடித்தால் வெளியில் செல்லவும் வீண் பேச்சு பேச வேண்டாம் என்று எஸ்.எம். விளம்பர பலகை போட்டார். நாங்கள் வாய் மூடி மௌனியானோம்.
எங்கள் மீராவோடைக் கிராமம் மிகவும் ஏழைகள் வாழும் ஊராகும். இங்கே ஏழை குமர்கள் வாழ்வதற்கு வீடில்லாமல் மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை எடுத்து கல்யாணம் முடிப்பதென்பது நடக்காத காரயமாக இருந்தது. மாப்பிள்ளைகளை மாப்பிள்ளைகளை பெத்த உம்மா மாரு அவகட நடப்பு சொல்லி மாளாது. சீதனக் கொடுமை தலை விரித்தாடியது. இவை எதுவுமில்லாமல் கல்யாணம் முடித்தால் இவனப் போல பேயன் யாருமில்ல என்று ஏளனம் செய்தது சமூகம். இந்த நிலையை எண்ணி, பெண்ணைப் பெத்த பெற்றோர் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தனர். தொழில் எதுவும் செய்ய முடியாது புலிகளின் தொல்லை ஒரு பக்கம் வயது வந்த பொம்புள புள்ளைகள வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை தேடிக் கொடுக்க முடியாத அவல நிலை.
இவ்வேளையில் திடீரென முளைத்தானுகள் அஞ்சாறு சப்புகள். ஆசை வார்த்தை காட்டி குமர் பிள்ளைகள் பன்னெண்டு வயசெல்லாம் முப்பது வயசாக்கி கள்ள பாஸ்போட் ஓபன் வீசா வென்றும், போட்டெடுக்கிற வீசா என்றும் ஏற்றுமதி வியாபாரம் ஏறிப் போச்சு. அதற்குள் எத்தனையோ தில்லு முல்லு. அரபு நாட்டு அடிமைகளாய் ஆகிப் போனார்கள். எமது பெண் பிள்ளைகள் அதுகளும் வெளிநாடு போகாட்டி ஊரு பட்டினியால் செத்திருக்கும். விடிஞ்சா தபால்கந்தோர் தீர்த்தக்கரை போலிருக்கும். கடிதமும், செக்கும் வரும் என காத்திருப்பார்கள் பெற்றோர்கள். அதற்கும் இடி விழுந்தது. குவைத்தை சதாம் ஹூசைன் பிடிக்கப் போனதுதான் அந்தச் செய்தி. “மரத்தாள் விழுந்தவனை மாடு குத்தின கதை போல” ஆகிப் போச்சு. அதுகளும் வரத் தொடங்கிற்று. யாபோட்டுக்கு வாப்பா மாரும் காக்கா தம்பிமாரும், படை எடுக்க தொடங்கினார்கள். புள்ளைகள கூட்டிக்கிட்டு வர ஊரு பஸ்ஸை தேடிப்பிடித்து கஸ்டப்பட்டு வந்து கொண்டிருந்தார்கள். அதற்குள்ள பஸ் கூலியை கேட்டால் தல வெடிக்கும் என்ன செய்யுற. வந்துதானே ஆகவேண்டும். ஊருக்க வந்து கொண்டிருந்தார்கள். இது மாறு சாதிகளுக்கு பிடிக்கல. மின்னேரி, கபறன காட்டுப் பகுதியால் வரக்குள்ள பஸ்ஸை மறித்து ஆயுத முனையில் கொள்ளையடிச்சாங்க. இத்தனையும் தாண்டி மக்கள் வந்து சேர்ந்தாங்க. இன்னும் சிலபேரு வந்து சேரவேயில்லை. அங்கே அகதியாக்கப்பட்ட அவர்கள் தஞ்சமடைந்தவர்களுடன் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாட்டுக்காரர்களை திருமணம் முடித்துக் கொண்டு போய்விட்டார்கள். இப்ப எங்களுக்கு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சொந்தக்கார ஆட்கள் இருக்காங்க.
ஊரு சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. தொழில் இல்லை, வறுமையில் வாடிக் கொண்டிருந்தார்கள் மக்கள். இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டு கிடந்தது. புலிகள் வந்து கொள்ளையடிப்பார்கள் என்றபயம் ஒரு புறம். அத்தியாவசியப் பொருட்கள் இல்லாதது மறுபுறம். நாவலடிக்கு அப்பால் போக்குவரத்து பாதைகள் மூடப்பட்டு ஆங்காங்கே சில முக்கியமான இடங்களில் இராணுவம் முகாம் அமைந்திருந்தது.
ஊரிலுள்ள பல இளைஞர்கள் வெலிகந்தைக்குப் போய் காட்டு வழியாக சைக்கிளில் மிகவும் சிரமத்திற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வந்து வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தனர். இதனால் ஓரளவு பொருட்கள் தட்டுப்பாடு நீங்கியது. சில நாட்கள் போயிருக்கும் ஒரு நாள் வெலிகந்தைக்குப் போனவர்கள் வெறுங்கையோடு திரும்பி வந்தார்கள். என்ன நடந்தது என்று கேட்டால் காட்டு வழியாக வரும்போது புலிகள் வந்து வாங்கி வந்த சாமான்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றதாக கூறினார்கள். இந்த தகவல் இராணுவத்திற்கு கசிந்திருந்தது.
மீண்டும் சில இளைஞர்கள் அடுத்த நாள் காலை வெலிக்கந்தைக்குப் போனார்கள் நேரம் போய்க் கொண்டே இருந்தது. அவர்கள் வரும் நேரம் தாண்டிவிட்டது. ஊருக்குள் பதற்றம் புலிகள் கடத்திட்டுப் போயிருப்பானுகள் என்று சில பேர் பேசிக் கொள்வது கேட்கிறது. இப்படியாக இருக்கும் போது இரவு எட்டு மணியிருக்கும் போனவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். என்ன நடந்ததென்று விசாரித்தோம். இராணுவ முகாமில் வைத்து ஆமிக்காரனுகள் சாமானகளை எல்லாம் பறிச்சுப் போட்டு எல்.ரீ.ரீ.ஈ க்கு சாமான் கொண்டு குடுக்குற என்று கேட்டு கேட்டு அடிச்சாங்க, அடிச்சிப்போட்டு ஒவ்வொரு நாளும் வந்து கொஞ்ச கொஞசமாக வாங்கி வந்த சாமான்களை கொண்டு போகச் சொன்னாங்க. என்று கூறினார்கள்.
மீண்டும் கஸ்டமான சூழ்நிலை. வறுமை ஒரு புறம், பயங்கரவாதம் மறுபுறம் ஊர் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது. புலிகளின் நடமாட்டம் இடையிடையே நடந்து கொண்டிருந்தது. இவ்வேளையில் மிகப் பயங்கரமான செய்தி கிடைத்தது. காத்தான்குடி பள்ளிவாயலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களின் மீது புலிகள் தாக்குதல் நடாத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டதாக. இன்னும் சில தினங்களில் ஏறாவூர் சதாம் ஹூசைன் கிராமம் புலிகளின் கொடூர கொலைச் செய்தி. இதையடுத்து பங்கிறானஈ பள்ளித்திடல், மஜீத் புரம் இப்படியாக புலிகளின் வெறியாட்டம் நாளுக்கு நாள் நடந்து கொண்டிருந்தது. ஊருக்குள் கடும்பயங்கரமான நிலை குலைந்து போனது ஊர்.
அடுத்த நாள் எங்கள் கிராமத்து மக்கள் வயல் நிலங்களை நம்பி வாழ்ந்தவர்கள். வயலுக்குள் வேளாண்மை அறுவடைக்காலமது. ஆதலால் வயலுக்குள் இருந்த முஸ்லிம்களை துரத்தி, துரத்தி சுட்டுக் கொன்றனர். சில பேர் கடத்திச் செல்லப்பட்டனர். சிலபேர் தப்பி வந்து சேர்ந்தனர். புனானை அணைக்கட்டில் வாழ்ந்த முஸ்லிம்கள் வெட்டியும், சுட்டும் கொலை செய்யப்பட்டனர். (முஸ்லிம்களின் வயல்களிலிருந்து வேளாண்மைகள், சூடுகள் போன்றவை ஆடு, மாடுகள் பல கோடி ரூபா பெறுமதியான அத்தனையும் தமிழர்களால் சூறையாடப்பட்டது. இதன் உரிமையாளர்கள் வெறுங்கையோடு வீடிக்கும் வழியில்லாமல் இருக்கிறார்கள். எங்கள் சொத்துக்களை எல்லாம் கொள்ளையடித்தவர்கள் இன்று பல்லாயிரம் ஏக்கர் நிலச் சொந்தக்காரர்கள். பெரும் தனவந்தர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்)
அன்று மஃரிப் தொழுகைக்கான அதான் கேட்க எல்லோரும் தொழுகைக்கு சென்றோம். எங்களுக்கு முன்வரிசையில் முகம்மது முத்து சேர்மன தொழுது கொண்டிருந்தார். தொழுது விட்டு அவர் வீட்டுக்குச் சென்றார். நாங்கள் பள்ளிவாயலுக்கு வெளியே கொட்டிக்கிடந்த வெள்ளை மணலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். திடீரென ஒருவர் ஓடி வந்து சேமனை புலிகள் கடத்திட்டு போறானுகள் என்றார். அவர் வீட்டை நோக்கி ஓடினோம். செய்தி உண்மையாக இருந்தது. அன்று கண்ட முகம்மது முத்து சேமனை இன்று வரை நாங்கள் காணவில்லை.
அன்றிலிருந்து எல்லைப்பகுதியிலிருந்த ஊர்மக்கள் ஊரை விட்டு மூட்டை முடிச்சுக்களோடு வெளியேறத் தொடங்கினர். தொண்ணூற்றைந்து வீதமான மக்கள் பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள சேனபுர, முஸ்லிம் கொலனி, தம்பாளை இப்படியான இடங்களுக்கு பர குடும்பங்களும், ஏனையவர்கள், மடாடுகம, கணேவெல்பொல போன்ற ஊர்களுக்கும் அகதியாய்ப் போய்ச் சேர்ந்தனர்.
ஊரே சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. அடிக்கடி புலிகள் வருவதும், போவதுமாக இருந்தனர். அவர்களை எதிர்த்து எங்களால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் நிராயுத பாணிகளாக நாங்கள் இருந்தோம். இருந்தாலும் எந்நேரமும் எங்களுக்குள் ஒரு எதிர்பார்ப்பிருந்தது. ஊரை இவர்கள் தாக்குவார்கள் என்று. கொமைனி, சின்னத்தம்பி, இஸ்ஹாக் மௌலவி, அஸீஸ் ஹாஜியார், பதூர் போன்றவர்களை (இவர்கள்தான் நாவலடியிலிருந்து ஊருக்குள் செல் அடிக்க வேண்டாம் என்று இராணுவத்தை ஊருக்குள் கூட்டி வந்தவர்கள்) இந்தச் செய்தி புலிகளுக்கு போய் சேர்ந்திருந்தது. இவர்களை புலிகள் தேடத் தொடங்கினர்.
கொமைனி சின்னத்தம்பியைத் தவிர மற்றவர்களெல்லாம் இஸ்ஹாக் மௌலவியோடு இராணுவத்துக்கு இளநீர் ஏற்றி வந்த லொறியில் தப்பியோடி ஏதோ ஒரு வகையில் கொழும்புக்கு போய் விட்டனர். இவர்கள் தலைமறைவான செய்தி புலிகளுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. தொடராக கொமைனியை தேடினார்கள். அவர் பயந்தொதுங்கவில்லை நடமாடித்திரிந்தார். வாழைச்சேனை ஹாராத் பள்ளிவாயலில் தொழுதுவிட்டு (மின்சார றான்ஸ்போமரை புலிகள் உடைத்ததால்) ஒரு விளக்கு மட்டும் பள்ளியில் எரிந்து கொண்டிருந்தது. தொழுதவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள் நானும், நாடங்கா ஹயாத்தும், மீரா முஹைதீன் ஜேபியும் பள்ளிவாயல் படிக்கட்டில் பேசிக் கொண்டு நின்றோம். அப்போது கொமைனி சின்னத்தம்பி தொழுவதற்காக பள்ளியினுள் சென்றார். நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்து மிக ரகசியமாக சொன்னார் புலிகள் வாரானுகள் என்று. நாங்கள் மறைந்து நின்று கொண்டு பார்த்தோம். மூன்று பேர் ஆயுதங்களுடன் கொமைனி சின்னத்தம்பியின் வீட்டுக்குப் போகும் பாதையில் போய்க் கொண்டிருந்தனர். சாலி ஹாஜியார் கடைச் சந்தி கழியும் வரை பார்த்துக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு தொழுதுவிட்டு கொமைனி வந்தார். உடனே ஹயாத்து சொன்னான். நீங்கள் போக வேண்டாமென்று. புலிகள் போறானுகள் அதுவும் உங்கட வீட்டுப் பக்கம்தான் போறானுகள் என்று மூவரும் சொன்னோம். அவர் கேட்கவில்லை. தம்பி பயந்து வாழ நான் கோழையில்லை. நான் வாறன் மௌத்து ஒரு நாள் தம்பி என்று சொல்லிவிட்டுப் போனார். அதுதான் அவருடைய கடைசிப் பயணம் என்று யாரும், ஏன்? அவர் கூட அறிந்திருக்கவில்லை. மீராமுகைதீன் சொன்னார். சின்னத்தம்பி மச்சான் சொல்லி கேட்கமாட்டார். இது இன்னும் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. சற்று நேரம் கழிந்திருக்கும் படபடவென வெடிச்சத்தம். வெடிச்சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினோம் கொமைனி சின்னத்தம்பி என்ற அந்த தியாகி எங்களை விட்டுப் போயிருந்தார். (இதை எழுதும் போது எனது நெஞ்சு இன்னும் குமுறுகிறது). எவர் பேசினாலும் அவர் தியாகத்தையும் அவரது நெஞ்சுரத்தையும் பேசிக் கொண்டேயிருந்தார்கள். அன்று மட்டும் (இன்று வரை அவரது குடும்பத்திற்கு யார் என்ன செய்தார்கள் நன்றி மறந்த சமூகமாய் இன்னும் இருக்கிறோமே என்பதுதான் வேதனை. நமக்காக நமது சமூகத்திற்காக அவர் செய்த தியாகத்தை எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறோம். இன்றைய இளம் சமுதாயத்திற்கு இதைப்பற்றி தெரியுமா இல்ல நாமதான் சொல்லி இருக்கோமா?)
ஊரை விட்டு பல குடும்பங்கள் வெளியேறிப் போய்விட்டதால் வெறுமையாக எங்கள் கிராமம் காட்சியளித்தது. பகலில் பெண்கள் விழித்திருக்க ஆண்கள் தூக்கம். இரவில் ஆண்கள் காவல் காக்க வேண்டிய நிலை எதிர்த்து நின்ற எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை. என்றாலும் ஊருக்குள் எஞ்சியிருந்தவர்கள் மிகவும் நெஞ்சுரமுள்ளவர்களாக இருந்தார்கள். எதையும் எதிர் கொள்ளும் தைரியம் அவர்களிடம் இருந்தது. அதனால்தான் இன்று இந்தக் கிராமம் இருக்கிறது. இல்லாவிட்டால் அத்திப்பட்டியாகியிருக்கும் எங்களூர். மஃரிப் தொழுகைக்காக எல்லோரும் பள்ளிவாயலுக்குள் போய் விட்டோம் சில பேர் காவல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். புலிகள் எல்லையிலிருந்து துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்துக் கொண்டு பள்ளிவாயலை நோக்கி முன்னேறினார்கள். தொழுதவர்கள் சிதறி ஓடினார்கள். உபைதுல்லாஹ் மௌலவி மட்டும் நடுப்பள்ளிக்குள் இருந்து கொண்டு குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார். நெருப்புக் கோளங்களாக வந்து கொண்டே இருந்தது. வரவர புலிகள் முன்னேறி வந்து கொண்டிருந்தார்கள். திடீரென இரண்டு இளைஞர்கள் எங்கிருந்தோ வந்தார்கள். எதிர்த்து நின்று எதிர்த் தாக்குதல் நடாத்தினார்கள். ஓடியோடி வேட்டுக்களைத் தீர்த்தனர். புலிகளுக்கு பயம் ஏற்பட்டிருக்க வேண்டும். பின் வாங்கிச் சென்றனர். நாங்கள் மாஞ்சோலை, பதுரியா இரு கிராமங்களையும், மீராவோடையில் அரைவாசிப் பகுதியையும் இழந்திருந்தோம். புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் அது இருந்தது. மிகுதியையாவது காப்பாற்ற மிகவும் போராட வேண்டியிருந்தது. இதிலிருந்தது சில நாட்களின் பின்னர் மீண்டும் இராணுவம் ஊருக்குள் வந்து காகித ஆலை, பெற்றோல் செட், கும்புறுமூலை என்று ஒவ்வொரு இடமாக முன்னேறிச் சென்று முகாம் அமைத்தனர். எங்களுக்கு இது மிகவும் ஆறுதலைத் தந்தது. படிப்படியாக மீராவோடை எல்லையையும், கிண்ணையடியிலும் இராணுவம் முகாம் அமைத்து இடையிடையே புலிகள் வந்து தாக்குவதும் பதில் தாக்குதலால் பின் வாங்குவதுமாக நடந்து கொண்டிருந்தது. ஊரிலுள்ள இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு ஊர் காவல் படையொன்று அமைக்கப்பட்டது. இருந்தாலும் ஒவ்வொரு சென்றிகளுக்கும், சாப்பாடும், தேனீரும் வழங்கி விடிய விடிய அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது. ஊர் காவல் படையில் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இஸ்ஹாக் மௌலவி நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் அவர்களுக்கு வழங்கி உதவினார். நாங்கள் சிறு சிறு வசூல்களை செய்து ஏனைய செலவுகளை சமாளித்துக் கொண்டோம். நாட்கள் நகர்ந்தன. பல மாதங்களின் பின்னர் நாங்கள் இழந்த பகுதிகளை இராணுவத்தின் உதவியோடு சென்று பார்த்தபோது வெறும் கட்டிடங்கள் மட்டுமே மிஞ்சியிருந்தது. கதவுகள், காவு நிலை, யன்னல்கள், ஓடு, கைமரங்கள் அனைத்தும் தமிழர்களால் புலிகளின் உதவியோடு சூறையாடப்பட்டிருந்தது. ஒரே ஒரு கதவு மட்டும் ஒரு வீட்டில் இருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் அதனை கழட்டி எடுத்து வரும் போது மறைந்திருந்த புலிகளால் (நெல்லி முகுமுது காக்கா) சுட்டுக் கொல்லப்பட்டார். மீயாங்குள காட்டுப்பகுதியில் விறகு எடுக்கப்போன நான்கு முஸ்லிம்கள் மறைந்திருந்த புலிகளால் கடத்திச் செல்லப்பட்டு வாகரையில் நிர்வாணமாய் ஊர்வலம் எடுத்து வாகனத்தில் கட்டியிழுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். இதில் ஒருவர் எனது மனைவியின் சகோதரர் அச்சி முகம்மது என்பவரும் ஒருவர். இன்னும் இரு முஸ்லிம்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்கள் கண்கள் தோண்டி எடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
மதுரங்குளம், குஞ்சன்குளம், கள்ளிச்சை ஆகிய விவசாயக் கிராமங்களில் வாழ்ந்த முஸ்லீம்கள் சில பேர் கடத்தப்பட்டார்கள் சில பேர் கொலை செய்யப்பட்டார்கள். நல்ல தம்பி வாழைச்சேனையைச் சேர்ந்தவர் இவரும் முறக்கொட்டான்சேனை மோகனும் இவர்கள் இருவரின் தலைமையில் சென்ற புலிகளால் முஸ்லிம் அனைவரும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பல இன்னல்களுக்கு மத்தியில் தப்பியோடி ரிதிதென்னைக்கு வந்து பாடசாலைக்குள் தஞ்சமடைந்தனர். இவர்களின் நிலையை அறிந்து உதவுவதற்காகச் சென்ற மேலதிக அரசாங்க அதிபர் வை.அஹமத், உதவி அரசாங்க அதிபர் ஏ.கே.உதுமான், சட்டத்தரணி முகைதீன், அதிபர் மஹ்மூத் ஆகியோரை முடக்குப்பாலையடி எனும் இடத்தில் வைத்து புலிகளின் வெறித்தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தனர். அவ்வேளை சாகுல் ஹமீது என்பவரும் கொல்லப்பட்டார். மதுரங்குளம், குஞ்சன்கல்குளம், கள்ளிச்சை ஆகிய கிராமங்கள் இதுவரையும் மீளக்குடியமர்த்தப்படாமல் தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஏனைய வயல் நிலங்களெல்லாம் ஆயுத முனையில் அபகரிக்கப்பட்டு முஸ்லீம்களின் நெற்காணிகளில் விளைந்த நெல்லுகளை விற்று அந்த மூலதனத்தோடு முஸ்லிம்களின் காணிகளில் விவசாயம் செய்து அதில் கிடைத்த வருமானத்தால் குறைந்த விலையில் மிரட்டி வாங்கப்பட்டு இன்று அவர்கள் தனவந்தர்களாகவும், நாங்கள் பிச்சைக்காரர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இதுபோல கல்குடா, கல்மடு, சுங்காங்கேணி, மீராவோடை, கறுவன்கேனி, கிண்ணையடி ஆகிய இடங்களிலிருந்த முஸ்லீம்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லாம் தமிழ் மக்களை திட்டமிட்டு குடியேற்றிய புலிகள் முற்றுமுழுதாக முஸ்லிம்களை விரட்டியடித்து இனச்சுத்திகரிப்பு நடத்திய வரலாறு மறக்கக் கூடியதாக இல்லை. விவசாயத்தை நம்பி வாழ்ந்த மக்கள் விவசாயம் செய்ய காணியுமில்லை, குடியிருக்க நிலமுமில்லை. இதனை சில அரசியல்வாதிகளும், புலிகளும் திட்டமிட்டு செயல்படுத்தினர். இன்று முஸ்லிம்கள் அத்தனை பொருளாதாரங்களையும் இழந்துவிட்டு பல கேடி பெறுமதியான கால்நடைகளையும் இழந்துவிட்டு நிர்க்கதியான நிலையில் ”போடிமாரெல்லாம் பிச்சைக்காரர்களாகி பிச்சைக் காரர்களெல்லாம் பணக்காரர்களாகி” புலிகள் முஸ்லீம்களுக்கு செய்த கைங்கரியம் முஸ்லிம்கள் இன்று நிருவாகப் பயங்கரவாதத்தில் அகப்பட்டுக் கொண்டு அல்லல் பட்டு குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்த அநியாயங்களும், கொலைகளும் இன்னும் இருக்கிறது. அதிலே நீண்ட பட்டியல் இருக்கிறது. இனியும் இவர்களுடன் சேர்ந்து உரிமை பெறுவது சாத்தியமான விடயமில்லை. சில அரசியல்வாதிகள் தங்கள் சுயநலத்திற்காக பிட்டும், தேங்காயும் கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது வெறுமனே வெற்று டப்பா என்பதை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். நம்பிக் கெட்டவர்கள் நாங்கள் இனிமேலும் சிந்திக்காமல் இருந்தால் ”பாலஸ்தீனம்”தான் நமக்கும் நம்ப நடப்போம், நம்பி நடக்க நாம் தயாரில்லை. நம்மிலுள்ள சிலபேர் புரிகளோட சேர்ந்து நம்மையும் கறுவறுத்து நம்மை கடத்திச் சென்று கப்பம் பறித்து அவர்களோடு சேர்ந்து போராடினார்களே, இயக்கம் வளர்த்தார்களே, இவர்களையாவது இவனுகள் விட்டானுகளா? நன்றி காட்ட மறந்த, மறுத்த இவனுகளை நம்பியா இந்த சமூகம் சேர்ந்து நிற்பது. சூடு, சொறனை உள்ளவன் ஒருக்காலும் இவனுகளோட சேர்ந்து வாழ கனவிலும் நினைக்கமாட்டான். தப்புக் கணக்குப் போட்டால் பிழையான விடைதான் கிடைக்கும். ஆகவே மிகத் தெளிவாக சிந்திக்க வேண்டிய தருணமிது. சிலபேர் சொல்றாங்க மன்னிக்கலாம், மறக்க இயலாது என்று, மன்னிக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது என்பதுதான் உண்மையான நிலைப்பாடாகும். பேன பஸ்ஸுக்கு கைகாட்டி பயனில்லை வாற பஸ்ஸுக்கு ஒழுங்காக கையைக்காட்டி சீற்றைப்பிடித்து பயணத்தை தொடருவோம். அப்போதுதான் எமது இலக்கை அடைய முடியும்.
கல்குடா பிரதேசமானது 1990ல் எவ்வாறு என்ற சிறுகதையுடன் வை.அஹமட்டின் கொலையினை ஞாபகமூட்டும் ஓட்டமவடி மீராவோடை சுபைரின் கவிதையுடனான காணொளி.30.12.2016 தொகுப்பு ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.

Comments
Post a Comment