மூதூர் கிண்ண உதைப் பந்தாட்ட போட்டி
(ihzana fareed)
மூதூர் உதைப்பந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட மூதூர் கிண்ண உதைப்பத்தாட்ட போட்டித் தொடரின் இறுதிப் போட்டி சனிக்கிழமை (24) மூதூர் எம்.சீ.சீ மைதானத்தில் இடம் பெற்றது.
இறுதிப் போட்டியில் ஹீரோ மற்றும் சீ.எஸ்.எப் அணிகள் மோதிக் கொண்டன.இப் போட்டியில் இரண்டு அணிகளாலு கோல்களை புகுத்த முடியவில்லை.இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா 5 பெனால்டி உதைகள் வழங்கப்பட்டன. இதில் சீ.எஸ்.எப் அணியினர் இரண்டு கோல்களை போட ஹீரோ அணியினர் நான்கு கோல்களை போட்டு மேலதிக இரண்டு கோல்களால் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஹீரோ அணியின் ஐ.ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டார்.
இந் நிகழ்வில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் கலந்து கொண்டதோடு சிறப்பு அதீதிகளாக மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் நிதி உதவியாளர் எம்.எம்.அறூஸ், மூதூர் உதைப்பந்தாட்ட லீக்கின் தலைவர் எம்.எஸ்.எம்.இர்பான், செயலாளர் எம்.எம்.பைஸாத், மூதூர் முதல்வன் பவுண்டேசன் தலைவர் ஏ.ஜீ.எம்.பாஹீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment