தம்புள்ளை பள்ளிக்கு காணி வழங்க நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை நடவடிக்கை

தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வா­சலை புதி­யதோர் இடத்தில் நிர்­மா­ணிப்­ப­தற்கு எத்­தனை பேர்ச் காணி வழங்­கலாம் என்­பதை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை கண்­கா­ணிப்­புக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளது.

தம்­புள்ளை ஜும்ஆ பள்­ளி­வா­சலை அவ்­வி­டத்­தி­லி­ருந்து வேறோர் இடத்­துக்கு இட­மாற்றிக் கொள்­வ­தற்கு புதிய இடத்தில் 80 பேர்ச் காணி வழங்­கு­மாறு அண்­மையில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. 

இதற்­க­மைய பள்­ளி­வா­சலில் வெள்­ளிக்­கி­ழ­மை­களில் எத்­தனை பேர் தொழு­கைக்­காக சமூ­க­ம­ளிக்­கி­றார்கள் என்னும் விப­ரங்­களை நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை அதி­கா­ரிகள் பள்­ளி­வா­ச­லுக்குச் சென்று திரட்­டி­யுள்­ளார்கள். 

சில தினங்­க­ளுக்கு முன்பு நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை உத்­தி­யோ­கத்­தர்கள் வருகை தந்து இந்த விப­ரங்­களைத் திரட்­டி­ய­தாக தம்­புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்­ளி­வாசல் தலைவர் எம்.ஐ.எம்.கியாஸ் தெரி­வித்தார். 

மேல் மாகாண அபி­வி­ருத்தி மற்றும் மாந­கர அபி­வி­ருத்தி அமைச்சர் சம்பிக்க தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ரத்­துக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தர முன்­வந்­துள்ள நிலை­யிலே இம் முன்­னெ­டுப்­புகள் நடை­பெ­று­வ­தா­கவும் அவர் கூறினார்.

இதே­வேளை தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்­தீனை ‘விடி­வெள்ளி’ தொடர்பு கொண்­ட­போது பள்­ளி­வா­சலில் ஜும்ஆ தொழு­கையில் சுமார் 1500 பேர் கலந்து கொள்­வ­தா­கவும் 718 பேர் ஜமா அத்­தார்­க­ளாக பதிவு செய்து கொண்­டுள்­ள­தா­கவும் கூறினார்.

அதனால் பள்ளிவாசலுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபை 80 பேர்ச் காணி ஒதுக்கித்தர வேண்டும் எனக் கோரியுள்ளதாகவும் கூறினார்.

Comments