அங்கும்புர பகுதியில் உள்ள அரச வங்கியொன்றில் தீ பரவல்

கண்டி - அங்கும்புர பகுதியில் உள்ள அரச வங்கியொன்றில் இன்று அதிகாலை தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ பரவலின் காரணமா பாரிய சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீயினை கண்டி தீயணைப்பு படையினரம் மற்றும் அங்கும்புர பொலிஸார் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மின்சார கசிவினால் குறித்த தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments