Skip to main content
முஸ்லிம் எம்.பிக்கள் ஜனாதிபதியிடையேயான சந்திப்பு ஒத்திவைப்பு
நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் சந்தித்து கலந்துரையாடினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(09) நடை பெற இருந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது சந்தர்ப்ப சூழ்நிலையினால் ஜனாதிபதி வருகை தர முடியாது போனபடியால் இக் கூட்டம் நாளைய தினம் மீண்டும் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இக் கூட்டத்துக்கு வருகை தந்திருந்த முஸ்லிம் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சமகால முஸ்லிம்களின் பிரச்சனைகள் தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் நாளைய தினம் ஜனாதிபதியுடன் எவ்வாறு எந்த விடயங்களை கலந்துரையாடுவது தொடர்பிலும் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிய வருகின்றது.
Comments
Post a Comment