Skip to main content
திருகோணமலையில் மரக்கறி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் உள்ள மரக்கறி வியாபாரிகள் தமது நான்கு கோரிக்கைகளை முன் வைத்து இன்று (05) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.திருகோணமலை நகர சபையினால் பொதுச்சந்த கட்டிடத்தொகுதியிலுள்ள கடைகள் வாடகைக்கு வழங்கப்பட்டும் வருடா வருடம் வாடகை அதிகரிக்கப்படுகின்றமை, அனுமதியற்ற வியாபாரிகளை நிறுத்தாமை, மின்சாரம் நீர் போன்ற வற்றை கட்டிடத்தொகுதியிலிருந்து தடை செய்தமை மற்றும் வரியை அதிகரித்தமை போன்ற நான்கு விடயங்களை வலியுறித்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கடந்த 2009ம் ஆண்டு நிர்மானிக்கப்பட்ட இச்சந்தை கட்டிடத்தொகுதியில் இதுவரைக்கும் எதுவித புணர்நிர்மானப்பணிகளும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் இரவில் இருட்டாக காட்டசியளிப்பதாகவும் வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.திருகோணமலை நகர சபை தமக்குறிய சிறந்த தீர்வினை பெற்றுத்தரும் வரை ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக சிறி சைவா கோத் செவ சங்கத்தின் செயலாளர் விஷித குமார தெரிவித்தார்..
(ihzana fareed)
Comments
Post a Comment