மூதூர் முபஷ்ஸிறா சங்கத்திற்கு மின்விசிறிகள் அன்பளிப்பு


மூதூர் முபஷ்ஸிறா சங்கத்தின் வருடாந்த பாலர் பாடசாலை பிரியாவிடை நிகழ்வு இன்று தாருல் ஜன்னாஹ் வித்தியாலய கேட்போர் கூடத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சமூக சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் ( P.அரபாத் ADP, H.M.மஹ்சூன் ஹாஜி, I.M.சக்கீம், S.ஹில்மி அதிபர், N.M.ஹிசாம் அதிபர், K,றசீம் பாலர் பாடசாலை இணைப்பாளர்) அதிதிகளாக கலந்துகொண்டதுடன் அத்தனை அதிதிகளும் பல குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதற்கு முன்வந்ததுடன் சமூக சேவையாளர் I.M.சக்கீம் அவர்களால் ஒரு தொகுதி மின்விசிறிகளை மேற்படி சங்கத்தின் தலைவர் றபீக் சர்றாஜ் மற்றும் செயலாளர் புஹாரி சஜான் பாலர் பாடசாலை தலைவர் ஆர். ஹில்மி பிரதிச் செயலாளர் M.M,நியாஸ் ஆசிரியர் அவர்களிடம் ஒப்படைத்தார்.

(ihzana fareed)

Comments