(வீடியோ).,ஓட்டமாவடி பிரதேசத்தின் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் கிரான் தமிழ் பிரதேசத்துடன் எதற்காக இணைக்கப்பட்டது.?! விளக்கம் அளிக்கின்றார் வாழைச்சேனை அப்துல்லா ஹாஜி…



(ihzana fareed)
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல்தொகுதி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்துடன் இருந்த ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் எதற்காக 2002ம் ஆண்டு கிரான் தமிழ் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டது என வாழைச்சேனையின் பூர்வீகத்தினை நன்று கற்றறிந்த அப்துல்லா ஹாஜியார் தெரிவிக்கும் கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காகவும், கல்குடா சமூகத்தின் அனைத்து தரப்பினர்களுக்காகவும், ஓர் ஆவணப்படுத்தும் உண்மை சம்பவமாகவே இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஐந்து கிராம சேவகர் பிரிவுகளும் கல்குடாவின் முன்னாள் பாராளுமன்ற பிரதி நிதி மறைந்த பிரதி அமைச்சர் மர்ஹூம் மொஹைதீன் அப்துல் காதர் தன்னுடைய வாக்கு வங்கியினை வாழைச்சேனை பிரதேசத்தில் இஸ்தீரப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் வாழைச்சேனை முஸ்லிம் பிரதேசத்திற்கு தனியான கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினை திறப்பதற்காகவே தமிழ் பிரதேச செயலகமான கிரான் பிரதேச செயலகத்திற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கு சொந்தமன குறித்த ஐந்து கிராம சேவகர் பிரிவுகளை விட்டுக்கொடுப்புச் செய்து வரலாற்று அரசியல் துரோகத்தினை கல்குடா சமூகத்திற்கு இழைத்து விட்டதாக கல்குடா சமூகத்தினால் விமர்சிக்கப்படும் விடயமாகவும், அரசியல் காலங்களில் மேடைகளில் பேசு பொருளாகவும் இருந்து வருகின்றது.

அத்தோடு வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்திற்கு 1999ம் ஆண்டு பனம்பலன ஆணைக்குழு மற்றும் 2000ம் ஆண்டு அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஏற்ப 242சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பினை பெற்றுகொடுக்கவில்லை என்பது மர்ஹும் மொஹைதீன் அப்துல் காதர் வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்தினை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் அவரினால் விடப்பட்ட பாரிய வரலாற்று அரசியல் அதிகாரம் சார்ந்த பிழையாகவும் ஒட்டு மொத்த கல்குடா சமூகத்தினால் விமர்சிக்கப்படுகின்றது. அந்த அடிப்படையிலே கல்குடா சமூகத்திற்கும், கல்குடா தொகுதி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் சமூகத்திற்கும்  இதன் உண்மை நிலையினை தெரியப்படுத்தி தீர்வுகளை நோக்கி நகர்த்தி ஆவணப்படுத்துவதுமே இந்த நேர்காணலின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

ஆகவே இந்த நேர்காணலின் மூலமாக உண்மை நிலவரங்களை தெளிவாகவும், நடு நிலைமையாகவும் சிந்தித்து உள்வாங்கி துரித செயற்பாடுகளுக்கு வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுடன் சகோதர இனமாகவும், பெரும்பான்மை சமூகமாகவும் வாழ்கின்ற தமிழ் சகோதர சமூகத்தினர் மற்றும் அவர்களுடைய பிரதி நிதிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை, தமிழ் புத்தி ஜீவிகள், வெளி நாட்டு புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கிழக்கின் முதலமைச்சர், முஸ்லிம் சமூகத்தின் இதர அரசியல் பிரதி நிதிகள் எல்லோரும் ஒட்டு மொத்தமாக சேர்ந்து ஓட்டமாவடி பிரதேச செயலகம் இழந்த ஐந்து கிராம சேவகர் பிரிவுகளையும், 

வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்திற்கு சிபார்சு செய்யப்பட்ட 242சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புக்களையும் மீள பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாய தேவையாகும். 

Comments