Skip to main content
தம்பலகாமம் பொலிஸார் சென்ற கெப் வாகனம் விபத்து: பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

திருகோணமலை-தம்பலகாமம் பொலிஸார் சென்ற கெப் வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி இன்று (04) காலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர.
இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கன்தளாய்,யுனிட் 16 இலக்கம் 1197இல் வசித்து வரும் 57835 பொலிஸ் சரயன் கே..லலித் ஆரியவன்ஷ (44 வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது கடந்த 02ம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் மதுபோதையில் சென்ற சந்தேக நபரொருவரை கைது செய்து சட்ட வைத்திய பரிசோதனைக்காக கன்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மின்கம்பத்துடன் மோதி கெப் வாகனமும் அதில் பயணித்த சிவிலியனும் நான்கு பொலிஸாரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதேவேளை படுகாயமடைந்த நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் கான்ஸ்டபிளே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
(ihzana fareed)
Comments
Post a Comment