Skip to main content
பாதிக்கப்பட்ட கிண்ணியா விவசாயிகளுக்கான உரமானியம்
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா செம்பிக்குளம், பனிச்சங்குளம் மேற்கு, வாழைமடு விவசாயிகளுக்கான உரமானியம் நிறுத்தப்பட்டமையினால் இப்பிரதேச விவசாயிகள் பெரும்சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இது குறித்த விவசாய சம்மேளனங்களின் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் முதலமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதூர் தொகுதி அமைப்பாளருமாகிய நஜீப் ஏ மஜீத் அவர்களின் முயற்சியின் பலனாக தடைசெய்யப்பட்ட உரமானிய கொடுப்பனவு மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேச ஏழை விவசாயிக்களுக்கான உரமானிய தடையினை நீக்குமாறு நஜீப் ஏ மஜீத் அவர்களினால் திருகோணமலை மாவட்ட செயலாளர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரிடம் விடுத்த வேண்டுகொளுக்கிணங்கவே இவ் உரமானியம் மீண்டும் வழங்கப்படவுள்ளது.
இதன்முலம் நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட விவசாயகுடும்பங்கள் பலனடையவுள்ளனர்.
(ihzana fareed)
Comments
Post a Comment