ஏழையின் சிரிப்பில் இறைவனை இன்று கண்டேன்.
அந்த அழைப்பிற்கு பதில் அளித்தார் அந்த ஒரு மனிதர். அவர் பெயர். சிவனேசன் மாங்குளம் ஒலுமடு எனும் இடத்தை சேர்ந்தவர்.
அவர் தன்னிடம்தான் குறித்த பை இருப்பதாகவும், உரிய அடையாளங்களுடன் தன்னிடம் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார்.
இன்று காலையில் திருகோணமலையில் இருந்து புறப்பட்ட நேரம் முதல் என்னுடன் எங்கு வரவேண்டும் என்பது தொடர்பாக கதைத்துகொண்டிருந்ததுடன். எனக்காக இன்று வேலைக்கும் போகாமல் காத்திருந்து என்னிடம் குறித்த பையை கையளித்தார்..
இன்று கிடைக்கும் பொருளை அபகரிக்கு நிலையில் வாழும் மனிதர்களுக்கு மத்தியில் ஒரு நல்ல மனிதரை காண கிடைத்தது. இன்று அவருடன் கழித்த நேரங்கள் மிகவும் சந்தோசமானது. அந்த மனிதரின் தோற்றமும், குணமும், என்னுள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது...
(இன்று பேஸ்புக்கில் தென்பட்டவை)
.

Comments
Post a Comment