உள்ளூராட்சி தேர்தலில் மு.கா. கிழக்கில் தனித்து களமிறங்கும்

ஏனைய பகுதிகளில் கூட்டாகவும் தனித்தும் போட்டி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் கிழக்கு மாகா­ணத்­திலும் சில பிர­தே­சங்­க­ளிலும் தனித்து மரச் சின்­னத்தில் போட்­டி­யி­டு­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீர்­வ­ழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். 

கிழக்கு மாகா­ணத்தில் தனித்துப் போட்­டி­யி­டு­வதன் மூலம் பெரு வெற்றி வாய்ப்­பினைப் பெற்­றுக்­கொள்ளும் என்றும் கூறினார்.

கடந்த சனிக்­கி­ழமை மாலை பாத்­த­தும்­பறை தேர்தல் தொகு­தியைச் சேர்ந்த மீகம்­ம­னயில் குடிநீர் வழங்கும் திட்­ட­மொன்­றினை ஆரம்­பித்து வைத்து அங்கு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய பிர­தே­சங்­களில் பெரும்­பான்மைக் கட்­சி­யொன்­றுடன் கூட்டுச் சேர்ந்து போட்­டி­யிடும். அது ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­டனா அல்­லது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யு­டனா என்று இது­வரை தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை.

எந்தக் கட்­சி­யுடன் சேர்ந்து போட்­டி­யிட்டால் முஸ்லிம் காங்­கிரஸ் அதி­க­மான பிர­தி­நி­தி­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­படும்.

தற்­போது நல்­லாட்சி நிறு­வி­யி­ருக்கும் பெரும்­பான்மைக் கட்­சிகள் இரண்டும் சேர்ந்து பொதுச் சின்­னத்தில் போட்­டி­யிட்டால் கூடு­த­லான வெற்­றி­வாய்ப்­பினைப் பெறக்­கூ­டி­ய­தாக இருக்கும் எனவும் தெரி­வித்தார்.

இதே­வேளை எதிர்­வரும் உள்­ளூ­ராட்சித் தேர்தலை பிரச்சினைகளின்றி எதிர்கொள்வதற்காகவே கட்சியின் உட்பூசல்கள் தீர்க்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments