தம்புள்ளையில் காரும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து.!

தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்புள்ளை-நாஉல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 2.30 மணியளவில் காரும் முச்சக்கரவண்டியும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் காரில் பயணித்த மூவர் மற்றும் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்த நிலையில் தம்புள்ளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



Comments