உரிய அதிகாரத்துடன் செயலாளர் பதவியில் நீடிக்க உத்தரவாதம்

ஹக்கீம் உறுதியளித்தார் என்கிறார் ஹஸனலி
கட்­சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் எனது செய­லாளர் நாயகம் பத­வியை உரிய அதி­கா­ரங்­க­ளுடன் நீடிப்­ப­தற்­கான உத்­த­ர­வா­தத்­தையும் தேசியப் பட்­டியல் எம்.பி பத­வியை வழங்­கு­வ­தற்­கான உறு­தி­யையும் அளித்­துள்ளார்.

எனக்கு தேசியப் பட்­டியல் எம்.பி. பத­வியை வழங்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.எம்.சல்­மானின் இரா­ஜி­னாமா கடி­தத்­தையும் தலைவர் அமைச்சர் ஹக்கீம் என்­னிடம் காட்­டினார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார். 

தேசியப் பட்­டியல் எம்.பி. பத­வி­யை­விட எனக்கு சகல அதி­கா­ரங்­க­ளுடன் கூடிய செய­லாளர் நாயகம் பத­வியே முக்­கி­ய­மா­னது. என்­றாலும் தேசியப் பட்­டியல் எம்.பி.பதவி தலை­வ­ரினால் எனக்கு ஏற்­க­னவே உத்­த­ர­வா­த­ம­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்னை மைய­மாகக் கொண்டு பிள­வுப்­ப­டக்­கூ­டாது. கட்­சியை நான் என் உயி­ரிலும் மேலாகக் கரு­து­கிறேன் என்றும் அவர் கூறினார். 

இதே­வேளை கட்­சியின் தேசியப் பட்­டியல் எம்.பி.எம்.எச்.எம்.சல்மான் தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை இது­வரை இச் செய்தி எழுதும் வரை சமர்ப்­பிக்­க­வில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் மன்சூர் ஏ.காதர் தெரி­வித்தார். 

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சல்­மானின் இரா­ஜி­னாமா கடி­தத்தை ஹஸன் அலி­யிடம் காண்­பித்­தாலும் அக்­க­டிதம் இது­வரை பாரா­ளு­மன்ற செய­லாளர் நாய­கத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

கட்­சிக்குள் சர்ச்சை
2015 ஆம் ஆண்டு கண்டி பொல்­கொல்­லையில் நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பேராளர் மாநாட்டில் ஹசன் அலி செய­லாளர் நாய­க­மாகப் பதவி வகிக்கும் நிலையில் உயர்­பீட செய­லாளர் எனும் பத­வி­யொன்று உரு­வாக்­கப்­பட்டு அப்­ப­தவி மன்சூர் ஏ.காத­ருக்கு வழங்­கப்­பட்ட நிலையில் கட்­சியின் உத்­தி­யோ­க­பூர்வ ஆவ­ணங்­களில் யார் கையொப்­ப­மி­டு­வது என்­பது தொடர்பில் பிரச்­சினை எழுந்­தது. ஹசன் அலிக்கு தேசியப் பட்­டியல் எம்.பி.பதவி வழங்­கப்­படும் என்று உறு­தி­ய­ளிக்­கப்­பட்டும் அப்­ப­தவி அவ­ருக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. 

இறு­தியில் ஹசன் அலி தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ருக்கு இது தொடர்பில் முறைப்­பாடு செய்தார். முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் மனுக்கள் அனுப்பி வைத்தார். இவ்­வாறு சர்ச்­சைகள் ஆரம்­பித்­தன. ஹசன் அலி கட்­சியின் உயர்­பீட கூட்­டங்கள் சில­வற்­றிலும் கலந்து கொள்­ள­வில்லை. 

மஹிந்த தேசப்­பி­ரி­ய­வு­ட­னான சந்­திப்பு
கடந்த வெள்­ளிக்­கி­ழமை காலை தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேச பிரி­ய­வுக்கும் முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், செய­லாளர் நாயகம் ஹசன் அலி, செய­லாளர் மன்சூர் ஏ.காதர், பிரதி செய­லா­ளரும் கல்­முனை முதல்­வ­ரு­மான நிஸாம் காரி­யப்பர் ஆகி­யோ­ருக்­கு­மி­டையில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் காரி­யா­ல­யத்தில் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது. 

கட்­சியின் செய­லாளர் யார் என்று தீர்­மா­னிக்கும் படியும் பிரச்­சி­னையை சுமு­க­மாக தீர்த்துக் கொள்­ளும்­ப­டியும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் வேண்­டினார். இரு­த­ரப்பு நியா­யங்­களும் முன் வைக்­கப்­பட்­டன. ஹசன் அலியை உரிய அதி­கா­ரங்­க­ளுடன் செய­லாளர் நாய­க­மாக நீடிப்­பது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

பேராளர் மாநாடு
செய­லாளர் நாயகம் ஹசன் அலியின் பதவி நீடிப்பு பேராளர் மாநாட்­டிலே தீர்­மா­னிக்­கப்­ப­ட­வுள்­ளது.  இந்த நீடிப்­புக்­காக தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஒரு­மா­த­கால அவ­காசம் வழங்­கி­யுள்ளார். எனவே பேராளர் மாநாடு இன்னும் ஒரு மாத காலத்­திற்குள் கூட்­டப்­படும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

எம்.ரி.ஹசன் அலி
செய­லாளர் நாயகம் ஹசன் அலி விடி­வெள்­ளிக்கு மேலும் தெரிவிக்கையில்;
கட்சியுடனான எனது உறவு மானசீக உறவாகும். அதனாலே நான் இத்தனை காலம் பொறுமையாக இருந்தேன் என்றார். 

கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மானை தொடர்பு கொள்ள விடிவெள்ளி பலமுறை முயற்சித்த போதும் அவர் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments