மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டால் வேலைக்கு ஆப்பு!

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் நாளை பிற்பகல் பணிக்கு திரும்பவில்லையென்றால் பணியில் இருந்து நீக்கப்படுவர் என அரசாங்கம்  அறிவித்தல் விடுத்துள்ளது.


நாளை பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் குறித்த பணியாளர்கள் வழமைப்போல் பணிக்கு திரும்பவில்லையாயின் அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

Comments