பால் மா விலைகளை அதிகரிக்க திட்டம்!

பால் மா விலைகளை அதிகரிப்பதற்கு பால் மா நிறுவனங்கள் நுகர்வோர் அதிகாரசபைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோ பால் மா விலையை 100 முதல் 117 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் 400 கிராம் பால் மா பக்கற்றின் விலையை 40 முதல் 46 ரூபாவினால் அதிகரிப்பதற்கும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய பால் மா விலையின் அடிப்படையில் புதிய விலை அதிகரிப்புக்கு இடமளிக்கப்படாது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Comments