வெகு விரைவில் இருளில் மூழ்கும் இலங்கை?

எதிர்காலத்தில் வறண்ட காலநிலை ஏற்பட்டால் நாடு மின்சார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் அதுல வன்னியாராச்சி இதனை தெரிவித்திருந்தார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் குறிப்பிடத்தக்க வகையில் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் துரிதமாக குறைவடைந்துள்ள நிலையில் , தற்போதைய நிலையில் நாடு பூராகவும் வறண்ட காலநிலையே காணப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

Comments