Skip to main content

பாராளுமன்ற கதிரையை உடைத்த மக்கள் பிரதிநிதி!


வரவு செலவு திட்ட குழு நிலை விவாதத்தின் போது ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தன்னை மறந்த நிலையில் ஆழ்ந்த உறக்கத்தினால் இவர் அமர்ந்திருந்த பெறுமதிமிக்க கதிரையை உடைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
.
பொதுவாக மக்கள் பிரதிநிகள் பாராளுமன்றில் வந்து உறங்குவது பொதுவான விடயமாகவே கடந்த சில காலமாக நடைப்பெற்று வருகின்றது.
இது யாவரும் அறிந்த விடயமே. ஆனால் தான் அமர்ந்திருந்த கதிரை உடைந்து தான் கீழே விழுவதைக்கூட அறியாது பாராளுமன்றத்தில் உறங்கியது அதிர்ச்சியாகனதொரு சம்பவமேயாகும்.
இப்போது பாராளுமன்றம் சுவாரசியமான இடமாக மாறிவிட்டது. ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்வதிலும், குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக்கொள்வதிலுமே பலர் முன்னிலை வகிக்கின்றனர்.
அதிக உடல் எடையை கொண்ட இந்த உறுப்பினர் தன்னை மறந்து உறங்கிய போது அவருடைய நிறையை தாங்கிக்கொள்ள முடியாத கதிரை உடைந்து அவர் கீழே விழுந்துள்ளார்.
அந்நேரத்தில் ஏனைய உறுப்பினர்கள் தூக்குங்கள். தூக்குங்கள் என கூச்சலிட்டு அவரை தூக்கியுள்ளனர்.
அதேசமயம் ஒருவர் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது, மற்றொரு பக்கம் அமர்ந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தொலைபேசியை பார்ப்பதிலேயே கண்ணும் கருத்தாக இருந்துள்ளார்.
கீழே ஒருவர் விழுந்து அமளி துமளியாக பாராளுமன்றம் மாறிய போதும் அதனையும் கண்டு கொள்ளாது தொலைபேசியில் அருகில் அமர்ந்திருந்த உறுப்பினர் மூழ்கியிருந்துள்ளார்.
இவர்கள் இங்கு செல்வது உறங்கவா அல்லது மக்களின் குறை தீர்க்கவா என்பதை தீர்மானிக்க வேண்டியது மக்களே…...

Comments