Skip to main content
பூனசார என அப்துல் ராசிக் கூறியதை பு _ _ சார என மொழிபெயர்த்த பொலிசார்...

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடு செய்த முஸ்லீம் தனியார் சட்ட திருத்தத்துக்கு எதிரான ஆர்பாட்டத்தில் ஞானசார தேரரை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் பொது செயளாலர் அப்துல் ராசிக்கின் குற்றப்பத்திரிகையில் (பீ ரிபோர்ட் ) அவர் கூறிய வார்த்தை பொலிஸாரால் திரிபுபடுத்தப்பட்டு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
" ஞானசாரயாவது பூனசாரயாவது யாராக இருந்தாலும் நாம் அஞ்சப்போவதில்லை " என அப்துல் ராசிக் கூறியிருந்தார். அதில் பூனசார என்ற வார்த்தையில் வரும் பூனை என்பதை பொலிஸார் பு__ சார என மொழி பெயர்த்து குற்றப்பத்திரிகையில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வழக்கு விசாரனையின் போது ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மைத்ரி குனரத்ன நீதிமன்றில் தெளிவுபடுத்தியுள்ளதுடன் பூனை என்ற சொல்லுக்கு Cat என்ற சரியான மொழிபெயர்ப்பையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் அப்துல் ராசிக் ஆர்பாட்டத்தில் பேசியவை அடங்கிய சீடி யும் ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சட்டத்தரணிகளால் நீதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment