Skip to main content
மற்றுமொரு பேஸ்புக் போராளி கைது. இனவாதம் பரப்பி இருக்காரு...
.
ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் இன்னுமொரு பேஸ்புக் நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இணையத்தள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் கடந்த வாரம் பேஸ்புக் பக்கத்துடன் தொடர்புடைய நிர்வாகி கைது செய்யப்பட்டிருந்தார். அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் கைது செய்யப்பட்டு ஒரு வாரம் நிறைவடைவதற்கு முன்னர் இன்னும் ஒரு பேஸ்புக் நிர்வாகி கைது செய்யப்படவுள்ளமை தொடர்பில் தற்போது வரையில் செய்தி வெளியாகியுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பவர் 23 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
பேஸ்புக் பக்கத்தின் ஊடாக போலி தகவல்கள் வெளியிட்டு இனவாத கருத்துக்கள் வெளியிட்டமையே அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குற்ற விசாரணை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
Comments
Post a Comment