Skip to main content
முஸ்லிம் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை 3 மணிக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி காரியாலயத்தில் சந்தித்து முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடவுள்ளார்.
இக்கலந்துரையாடலில் நீதியமைச்சர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார்.
இனவாத செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரை, அரச உயர் மட்டத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் தூக்குவதை யாராலும் தடுக்க முடியாது என கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் நேற்றைய தினமே பாராளுமன்றத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை சமரசப்படுத்தியதுடன், முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுத் தருவதாகவும் வாக்குறுதி வழங்கியிருந்தனர்.
Comments
Post a Comment