நாவல் மரக்குற்றிகளுடன் இருவர் கைது

(ihzana fareed)
கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட அரசுக்கு சொந்தமான குளத்துக்கு காட்டுப்பகுதியில் நாவல் மரக்குற்றிகள் 20 இருபதுடன் இருவரை நேற்று (18) மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கந்தளாய்.தீவரகம பகுதியைச்சேர்ந்த எஸ்.டி.துசிதகுமார (33வயது) மற்றும் கே.சமிந்த (34வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Comments