கடந்த வருடத்தை விட அரச வருமானம் அதிகரிப்பு.!

இவ்­வ­ரு­டத்தில் முதல் ஒன்­பது மாதங்­களில் கடந்த ஆண்­டுக்கு நிக­ராக நூற்­றுக்கு 23 வீதத்தால் அரச வரு­மானம் அதி­க­ரித்­துள்­ள­தோடு. கடந்த வரு­டத்தின் முதல் 09 மாதங்­களில் 959 பில்­லி­ய­னாக இருந்த அரச வரு­மானம், இவ்­வ­ரு­டத்தில் அதே காலப்­ப­கு­தியில் 1180 பில்­லி­ய­னாக அதி­க­ரித்­துள்­ள­தென்று நிதி­ய­மைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

சுங்க திணைக்­களம், கலால் திணைக்­களம், உள்­நாட்டு இறை­வரித் திணைக்­களம் போன்ற நிறு­வ­னங்­களின் செயற்­றிறன் அதி­க­ரித்­துள்­ள­மையால் இவ்­வ­ரு­டத்தில் அரச வரு­மானம் குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­க­ரித்­துள்­ளது. மேலும் முதல் 09 மாதங்­களில் 1067 பில்­லியன் ரூபா வரி மூலம் வரு­மானம் கிடைத்­துள்­ளது.

இதன்­படி வரி மூலம் கிடைக்­கப்­பெற்ற வரு­மா­ன­மா­னது கடந்த ஆண்டை விட 22 சத­வீத அதி­க­ரிப்பை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன்­ப­ல­னாக இவ்­வ­ரு­டத்தில் வரவு செலவு பற்­றாக்­குறை குறைந்­துள்­ளது. 

அமைச்­சுக்கள் மற்றும் மாகாண சபைகள் போன்­ற­வற்­றிற்கு 2017ஆம் ஆண்டு வரவு–செலவு திட்­டத்­தி­னூ­டாக நிதி ஒதுக்­கப்­பட்­டி­ருப்­பது அவற்றின் செயற்பாடுகளைப் பொறுத்தே என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள் ளமை குறிப்பிடத்தக்கது.

Comments