Skip to main content
வடமாகாண சபைக்கு தனியான தேசிய கீதம் என்ற செய்தி உண்மையில்லை!
வடமாகாண சபைக்கு தனியான தேசிய கீதம் என்ற தலைப்பில் திவயின பத்திரிகையில் கடந்த 10ஆம் திகதி வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதென தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண சபையின் தலைவர் சி.பி.கே.சிவஞானம் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியை திரு. சிவஞானம் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் திரு.சிவஞானம், அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வடமாகாண சபைக்கு 3 வருட காலம் பூர்த்தியடையும் சந்தர்ப்பத்தில் ஏனைய மாகாணங்களைப் போன்று வடமாகாணத்திற்கும் தனியான தேசிய கீதம் தயாரிக்கப்பட வேண்டுமென்று தாம் சபையில் தெரிவித்ததாக அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், இந்தச் செய்தியை திரிபுபடுத்தி பத்திரிகை நிறுவனம், செய்தி வெளியிட்டிருப்பதாக, திரு.சிவஞானம் அரச தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலான் சூரியவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment