முதலமைச்சரின் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் பலி.!

சீகிரிய - சீகிமுல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்த விபத்தில் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல் ஜயரத்னவின் வாகனத்தில் மோதுண்டு முச்சக்கர வண்டியில்  பயணித்த மெல்சிரிபுர பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
வடமத்திய மாகாண முதலமைச்சர் பயணித்த ஜுப் வண்டி குறித்த முச்சக்கர வண்டியின் பின் பக்கத்தில் மோதுண்டுள்ளமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பேஷல் ஜயரத்னவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Comments