பொதுச் சொத்துக்களை ‘விற்க’ மாட்டோம்: ரவி!

பொதுச் சொத்துக்களை ஒரு போதும் அரசாங்கம் விற்பனை செய்யப் போவதில்லையெனவும் தனியார் மயப்படுத்தப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளார் நிதியமைச்சர்.


ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீனாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள கூட்டுறவு ஒப்பந்தத்தின் பின்னணியில் தோன்றியுள்ள சூழ்நிலைக்கு பதிலளிக்கு முகமாகவே நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


2017ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் அடிப்படையில் வெளிநாட்டுக் கடன்களை பங்குகள் மூலம் உற்பத்தித் திறனுக்குப் பயன்படுத்தும் முயற்சியின் கட்டமாகவே கடந்த அரசின் கடன்களை கூட்டுறவு முறை மூலம் இவ்வரசாங்கம் நிவர்த்தி செய்ய முயற்சிப்பதாகவும் ஒரு போதும் பொதுச் சொத்துக்கள் முழுமையாகத் தனியார் மயப்படுத்தப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments