சிங்கள பௌத்த மக்களுக்கு இருக்கும் உரிமை சிறுபான்மை மக்களுக்கும் இருக்கவேண்டும்

நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல
சிங்­கள பௌத்த மக்­க­ளுக்கு இருக்கும் உரிமை சிறு­பான்­மை­யி­ன­ருக்கும் இருக்­க­வேண்டும் என்­பதே ஐக்­கி­ய­தே­சியக் கட்­சியின் நிலைப்­பா­டாகும்என்று உயர்­கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரி­யல்ல தெரி­வித்­துள்ளார்.

நெடுஞ்­சா­லை­ அ­பி­வி­ருத்தி திட்­டத்தின் கீழ் பூஜாப்­பிட்­டிய அம்­பத்­தென்ன ஏ.சி.எஸ். ஹமீட் மாவத்தை வீதியை கார்பட் இட்டு சீர்­செய்­வ­தற்­கான பணிகள் நேற்று ஆரம்­பிக்­கப்­பட்­டன. இது­தொ­டர்­பான நிகழ்வில் உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார்.

தமது கட்சி கடும்­போக்­கான கட்­சி­யல்ல என்று தெரி­வித்த அமைச்சர், ஆட்­சியில் இருக்­கும்­வ­ரையில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு எந்­த­வித இடை­யூறும் ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என்றும் அமைச்சர் நம்­பிக்கை தெரி­வித்தார்.

அமைச்சர் மேலும் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் ,நாட்டின் முக்­கிய இரண்டு கட்­சி­களும் இணைந்து அமைத்­துள்ள அர­சாங்கம் எந்­த­வ­கை­யிலும் வீழ்ச்சிய­டை­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது.

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் வெளி­நா­டு­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்தி நாட்டில் பாரி­ய­ளவில் முத­லீ­டுகள் இடப்படுவ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர்.

இதன்­ப­ல­னாக அம்­பாந்­தோட்­டை­யி­லி­ருந்து மொன­றா­கலை வரையில் 500 கைத்­தொ­ழி­ற்­சா­லை­களை அமைப்­ப­தற்கு அர­சாங்கம் எதிர்­பார்த்­துள்­ளது.

சீனா இலங்­கையில் உற்­பத்தி செய்யும் பொருட்­களை இந்­தி­யா­விற்கு ஏற்­று­ம­தி­செய்யும். இலங்­கை­யி­லி­ருந்து ஏற்­று­மதி செய்­யப்­படும் பொருட்­க­ளுக்கு இந்­தியா குறை­வான வரியை அற­வி­டு­வது தொடர்­பாக இந்­தி­யா­வுடன் ஒப்­பந்­த­மொன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இத­னூ­டாக இலங்­கைக்கு பாரிய வரு­மா­னத்தை பெற்­றுக்­கொள்ள முடியும்.

சீன அர­சாங்கம் மேற்­கொள்ளும் முத­லீ­டுகள் மூலம் ஒரு­லட்சம் வேலை­வாய்ப்­புக்­கான சந்­தர்ப்பம் கிட்­ட­வுள்­ளது.

இவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை சீர்­கு­லைப்­ப­தற்கு சில சக்­திகள் முயன்­ற­போ­திலும் அர­சாங்கம் எதிர்­கா­லத்­திட்­டத்தில் தடை­ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இட­ம­ளிக்­காது என்றும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய விவகாரம், தபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் ஹலீம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஜெ.ஜெய்னுலாப்தீன் மற்றும் ஹிதாயத் சத்தார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Comments