​அலெப்போ (ஹலப்)... மரணத்திற்கு கிடைத்த வெற்றி!

முஹம்மத் பகீஹுத்தீன் –

மனித ரத்தம் குடிக்கும் ஈரானிய அதிகாரப்பசிக்கு அலப்போ நகரம் போதாது. சியோனிச எதிரிகளின் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் கூலிப்படையான ரஷ்யாவும் ஈரானும் மனிதாபிமானத்தை பச்சசையாக கடித்துக் குதறி வருகின்றன.

உலக வரலாற்றிலேயே பழமைமிகக் நகரமான அலப்போவை ரத்தத்தில் மூழ்கடித்து விட்டு சந்தோசம் கொண்டாடிய சண்டாளன் அஸதின் நுஸைரியப் படையும் துணைக்கு வந்த ஈரானும் ரஷ்யாவும் தாம் பயங்கர மிருகங்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

சுமார் 2.3 மில்லியன் மக்கள் வாழும் இஸ்லாமிய கலாசார முதுசங்களை உள்ளடக்கிய அலப்போ நகரத்தை கொத்து கொத்தாக குண்டு வீசி தாக்கியழித்துவிட்டு, இலட்சக்கணக்கான மக்களை பலவந்தமாக அகதியாக்கும் சிரியா அரசும் அதற்கு பக்கபலமாக உதவும் ஈரானும் ரஷ்யாவும் இன்று கூத்துடன் கும்மாளம் அடித்து மகிழ்கிறார்கள்.

ஆனால் அசத்தியம் அழிந்தே தீரும் என்ற எளிய உண்மையை அவர்களால் இப்போது புரிய முடியவில்லை. கைபரின் வாரிசுகள் மீண்டு வரும்போது மிரண்டு போவார்கள். கலக்கம் குடியிருக்கும் இதயங்களாக அப்போது அவர்கள் நடமாடுவார்கள். சிரிய மக்களே சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம். பற்றி எரியும் சிரயா மரணத்தின் கோட்டைக்குள் நுழைகிறது. ஆனால் அது போராட்ட பூமி. வீர சிங்கங்கள் மீண்டுவருவதை ஈரானின் அதிகார ஆசையால் தடுக்கமுடியாது. சியோனிசத்தின் ராஜ தந்திரத்தால் நிறுத்த முடியாது. பலம் பொருந்திய கோட்டைகளை கொண்ட பனூ நளீர் கோத்திரம் அகழிக்குப் பிறகு முகவரியில்லாமல் அழிந்து போனது.

அலப்போ கைநழுவி விட்டது என்பதற்காக கவலை வேண்டாம். மொத்த பூமியும் மக்கள் வசம் தான் உள்ளது. தூய ஈமான் உள்ளவரை போராடும் உணர்வு மரணிப்பதில்லை. சத்தியத்தை ஒரு போதும் சாகடிக்க முடியாது. சத்தியம் வாழ வேண்டும் என்பதற்காக சத்தியத்தை சுமந்தவர்கள் மரணிப்பார்கள். ஆனால் கொள்கை வாழும்.

அன்று மங்கோலியர்களால் பக்தாத் மரணத்தை சுவைத்தது. முஸ்லிம் உலகெங்கும் இழவு பரவியது. மௌனம் காற்றில் பறந்தது. இயலாமை காராணமாக வாய் மூடி கழுத்தை நீட்டிய முஸ்லிம்களின் இழிவை விட வேறு என்ன அவமானம் இருக்க முடியும்?! 13ம் நூற்றாண்டில் நடந்த அந்த துன்பியல் நிகழ்வு இன்று சிரியா மண்ணில் மீண்டும் ஷீஆ ஆதிக்கவாதிகளால் மீட்டப்படுகிறது.

அன்று என் தாய் என்னை பெற்றெடுக்காமல் இருந்திருக்கக் கூடாதா? என்று உள்ளம் வெந்து கதறினார்கள். இன்று துஷ்டர்களான படுமோசமான ஷீஆ பிரிவான நுஸைரிகளின் கையில் சிக்கி அவமானப்படுவதற்கு முன்பே எம்மை கொன்று விடுங்கள் அல்லது தற்கொலைக்கு வழியுண்டா என்று கேட்டு ஏங்குகிறார்கள்.

தப்பிப் பிழைக்கும் குமரிகள், வயோதிபர்கள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என தேடிப் பிடித்து தாக்கும் கல் நெஞ்சம் கொண்ட அஸதின் படை, அதற்கு உதவும் ஈரனிய ரஷ்ய காட்டு மிராண்டிகள், முதலுதவி வண்டிகளை கூட விட்டு விடவில்லை. அதனையும் இலக்கு வைத்து தாக்குகின்றனர். வைத்திய சாலைகளை பொசுக்குகி வருகின்றனர். யார் இவர்கள்? இன்றை மங்கோலியர்கள் தான்.

காப்பாற்றுங்கள் என்று கதறும் உடன் பிறப்புக்களுக்கு ஆர்ப்பாட்டம் கூட இல்லையே! கோபத்தை காட்ட கழுத்து நொறுக்கப்படும் வரை காத்திருக்கத்தான் வேண்டுமா?

இதுவரை கயவர்களின் மிருகத்தனமான கூட்டுத் தாக்குதல்களால் சுமார் ஐந்து இலட்சம் பேர் மரணித்துள்ளனர். எட்டு மில்லியன் பேர் உடல் ஊனமுற்றுள்ளனர்.
2.3 மில்லியன் பேர் வசிக்கும் அலப்போ நகரில் ஒரு பாடசாலை கூட மிச்சம் இல்லை. அத்தனையும் தகர்க்கப்பட்டுள்ளன.
மொத்த சிரியாவின் மூன்றில் ஒரு பாடசாலைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.
சுமார் 23 மில்லியன் வாழும் சிரியாவில் இன்று பாதிப்பேர் அகதிகள்.
9 மில்லியன் பேர் வாழும் இடத்துக்கு போக முடியாது. உதவ முடியாது. அந்தளவு கஷ்டம் நிலவுகிறது.
80 சதவீத மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளார்கள்.
  
இவ்வளவு நடந்த பிறகும் சிரியாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடர்கிறது என ஊடகம் ஊதிவருகிறது. அஸத் நிரபராதி என்று சொல்லுவது தான் அதன் அர்த்தம். கேவலம் சில ஊடகங்கள் சிரிய அரசு விடுதலைக்காக போராடுகிறது என வர்ணித்துள்ளன. இதனைவிட மௌனமாகவே இருந்திருக்கலாம்.

ஈரானும் ரஷ்யாவும் அஸதுக்கு உதவியிருக்கா விட்டால் அவனின் கொடுங்கோல் ஆட்சி என்றோ அழிந்து போயிருக்கும்.

சிரியா மக்களே! கவலை வேண்டாம்.
உயிர்களை இழக்கலாம்
உரிமைகளை இழக்கலாம்
உடமைகளை இழக்கலாம்
உணர்வை இழக்க வேண்டாம்.
அசத்தியம் காலம் கடந்து போவதால் சத்தியமாகுவதில்லை.

Comments