Skip to main content
கந்தளாயில் அரைகிலோ கேரளா கஞ்சாவை வைத்திருந்தவர் விளக்கமறியலில்
(இஹ்சானா பாரித்)
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரைகிலோ கேரளா கஞ்சாவை வைத்திருந்த அக்போபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபரொருவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற பதில் நீதவான் சானிக்கா பெரேரா இன்று ஞாயிற்றுக்கிழமை (11) உத்தரவிட்டார்.
சந்தேகநபர் கேரளா கஞ்சா பாவிப்பதாகவும்,கேரளா கஞ்சா வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த சந்தேக நபரின் வீட்டினை சோதனை மேற்கொண்ட போதே வீட்டின் பின் புரத்தில் மரப்பொந்துக்குள் காணமுடியாத அளவுக்கு மரைத்து வைத்திருந்த நிலையிலே சனிக்கிழமை (10) மாலையில் அரைக்கிலோ கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபரையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபரை கந்தளாய் நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
Comments
Post a Comment