கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலம் எப்போது நிர்மாணிக்கப்படும்?

குறிஞ்சக்கேணி பாலம் விடயதில் இனியும் தாமதம் வேண்டாம்.
கடந்த இரண்டு வருடங்களாக எமது முகநூல் மூலம் நற்புகள் பல குறிஞ்சக்கேணி பாலமும் அதன் அபாயம் பற்றி தெளிவாக பல இடங்களில் எழுதி விழிப்படைய செய்து ஜனாதிபதி வாக்குறுதி சம்பந்தமாக பல தடவைகள் அரசியல் தலமைகளின் கவணதிற்க்கு கொண்டு வரப்பட்டது.
இப்பாலம் 2014 டிசெம்பர் ஏற்பட்ட வெள்ளப் பெறுக்கினால் உடைந்து விழுந்து அப்போது ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்ற வேளை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நகர சபை மைதானதில் இடம் பெற்ற பிரச்சார மேடையில் கட்சி வேறுபாடின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தெளிவாக நான் ஜனாதிபதியாக வந்ததும் கிண்ணியாவின் இரண்டு பாலங்களான குறிஞ்சக்கேணி, குட்டிகரச்சி பாலங்களை கட்டிவிப்பேன் என்ற வாக்குறுதி பலத்த கரகோசங்களுக்கு மத்தியில் வர வேற்க்கப்பட்டது.
ஜனாதிபதியின் வாக்குறுதி மேலும் எமது கிண்ணியா வாழ் மக்களின் நம்பிக்கையை வென்றதால் முழு கிண்ணியாவும் ஜனாதிபதியின் வெற்றிக்கு முழுமையான ஆதரவை நல்கியது.
இவை இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்று வரை நிறைவேற்றப்படமல் இருக்கின்றது. நல்லாட்சி முஸ்லீங்களின் பிரதேச அபிவிருத்தியில் ஏனைய இரு இனங்களையும் விட குறைந்தளவு சேவையை வழங்குவதாக கடந்த காலங்களில் அரசியல், சிவில் சமூகங்களின் குற்றச்சாட்டாகவுள்ளது.
இவை இவ்வாறு இருக்க நாம் எமது பாலத்தை கட்டுவிக்க எடுக்கும் முயற்சிகள் யாவும் பயன்ற்றதாக காண்கிறோம். இதன் அபாய நிலை பற்றி ஒருமுறை மழை பெய்ததும் இரவு வேளைகளில் பயணிப்பவர்களுக்கே தெரியும் இப்பாலம் உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.
அத்துடன் வெளிச்சமில்லாமல் இருப்பது மேலும் பயண சங்கடங்களை பொது மக்களுக்கு ஏற்படுத்துகிறது இப்பாலதுக்கு வெளிச்சம் வழங்கும் எந்தவொரு நடவடிக்கையும் உள்ளுராட்சி சபைகளால் இதுவரை சரியான திட்டமிடலில் அமையவில்லை. எனது ஊகம் இவர்கள் இப்பாலத்தில் உயிரிழப்பை காணும் வரையிலும் எந்த தேவையான நடவடிக்கைகளையும் ஏற்படுத்த முணைய மாட்டார்கள் என்பது.
இவ்வாறு தொடர்ந்து நாம் விழுப்புற்றுபவர்களாக இருக்காது சாத்தியமான போராட்டங்களை அமைத்து சரியான எமது அபிவிருத்திக்கு போராட வேண்டிய கட்டம் அண்மித்துள்ளது.
இன்னும் ஒறு மாத காலதில் இப்பால வேளைகளை ஆரம்பிக்கப்படாத விடத்து கிண்ணியா மக்களாகிய நாம் ஜனாதிபதியின் வெற்றிக்கு எவ்வாறு ஆதரவு வழங்க நாம் முனைந்தோமோ அது போன்று அகிம்சை வழி போராட்டம் மூலம் பொது மக்கள் ஒன்றிணைத்து இதனை கட்டுவிக்க ஒரு போதும் தயங்க கூடாது என கிண்ணியா மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(IHZANA FAREED)

Comments