கொழும்பில் கூரிய வாளுடன், பரீட்சைக்கு சென்ற மாணவன்
சுமார் 2 அடி நீளமுள்ள கூரிய வாள் ஒன்றை தனது குடைக்குள் அவர் மிக சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் பரீட்சை நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸார் மாணவரை சோதனைக்கு உட்படுத்திய போது வாள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த மாணவருக்கு நேற்று பரீட்சையில் தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவரின் செயற்பாடு குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Comments
Post a Comment