திருகோணமலை அஸ்மி பாலர் பாடசாலையின் இறுதியாண்டு விழா
(இஹ்ஸானா பரீத்)
திருகோணமலை ரொட்டவெவ அஸ்மி பாலர் பாடசாலையின் இறுதியாண்டு கலை நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும்
முஸ்லிம் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (16) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மொறவெவ வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் போல் ரொஷான் கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் உத்திகோகத்தர் ஏ.ஆர்.நவாப் மற்றும் எம்.எம்.தௌபீக் ரொட்டவெவ பள்ளி பரிபாலன சபைத்தலைவர் மௌலவி அப்துல்சத்தார், பேஷ் இமாம் நஸார்தீன் அத்துடன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம்.பைஸர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண முன்பள்ளி உத்தியோகத்தர் எம்.எம்.தௌபீக் திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமமான ரொட்டவெவ கிராமத்தில் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமொன்றில் கடந்த 2001ம் ஆண்டு தனிநபரொருவரினால் சிறார்களை வீடு வீடாகச்சென்று சேர்த்துக்கொண்டு ஆரம்பிக்கப்ட்ட இப்பாலர் பாடசாலை மிகவும் முன்னேற்றம் கண்டுள்ளதையிட்டு பெரு மகிழ்சியடைகின்றேன்.>
2003ம் ஆண்டு ரொட்டவெவ அஸ்மி சிறுவர் கழகத்தினால் அஸ்மி பாலர் பாடசாலை என பெயர் சூட்டப்பட்டு கிழக்குமாகாண கல்வி அமைச்சில் முதன் முதலாக பதிவு செய்யப்படடது.
அதன் ஸ்தாபகராக ஊடகவியலாளர் ஒருவர் செயற்படுவதையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
மொறவெவ பிரதேசத்தில் சிறந்த பாலர் பாடசாலையாக இந்த அஸ்மி பாலர் பாடசாலை திகழ்வதையும் முதலில் இப்பாலர் பாடசாலையை ஆரம்பித்த ஸ்தாபகர் அப்துல்சலாம் முகம்மட் யாசீம் (ASMYPre School) என்பவருக்கும் இதன் தலைமை ஆசிரியை ஏ.றிஸ்வானா மற்றும் என்.பௌமியா பேகம்-பீ.எம்.ஏ.ஹமீதா ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை பெற்றோர்கள் முகவும் பிள்ளைகளுடன் மிக கரிசனையும் செயற்பட் வேண்டும். எனவும் கிழக்கு மாகாண முன்பள்ளி கல்வி பணியகத்தியன் அதிகாரி எம்.எம்.தௌபீக் வேண்டுகோள் விடுத்தார். /

Comments
Post a Comment