மாமாவுடன் இணைந்து மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை சிக்கினான். #புத்தளம் பகுதியில்..

புத்தளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவரை முந்தலம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் குறித்த பாடசாலை மாணவியின் தந்தை என்றும் மற்றையவர் மாமா என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாடசாலை மாணவியின் தாய் வெளிநாட்டிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமி 11 வயதுடையவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட சிறுமி தந்தையின் பாதுகாப்பின் கீழே வளர்ந்துள்ளார்.

தனது மகளை பக்கத்து வீட்டில் உள்ள இளைஞர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார் என குறித்த சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய மகளுடன் சென்றுள்ளார்.

மேலும், புத்தளம் மருத்துவமனையில் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளின் மூலம் இந்த சம்பவத்துடன் சிறுமியின் தந்தையும் தொடர்புப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

இந்த துஸ்பிரயோகத்துடன் தொடர்புடைய மற்றைய நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments