(வீடியோ).,கல்குடா இஸ்லாமிய அமைப்புக்களே இது உங்களின் மாற்று நகர்வுகளுக்கான கவனத்திற்கு.
மட்டக்களப்பு கல்குடா தொகுதி, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையில் எல்லிகளுக்கு உட்பட்ட காவத்தமுனை கிராம சேவகர் பிரிவில் உள்ள பள்ளிமடு கிராமத்தில் அமையப்பெற்றுள்ள கப்ர்ஸ்தானமானது கல்குடா பிரதேசத்து முஸ்லிம்களின் பூர்வீகத்தினை உறுதிப்படுத்தும் மிகப்பெரிய சான்றாக இன்றும் இருந்து வருகின்றது.
குறித்த விவசாய கண்டத்தில் பெரும்பான்மை முஸ்லிம்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதினால் கல்குடா இஸ்லாமிய அமைப்புக்கள் கூடிய கவனம் செலுத்தி பள்ளிவாயல் ஒன்றினை நிர்மாணிப்பது காலத்தின் கட்டாய தேவையாகவும்,
..
.
குறித்த பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற விவசாய சமூகத்தின் எதிர்பார்ப்பாகவும் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களினுடைய பூர்வீகம் சம்பந்தமான தேடல்களில் ஈடுபட்டு வரும் சமூக ஆர்வலர் சாட்டோ வை.எல்.மன்சூரின் வேண்டுகோளாக இருக்கின்றது.(ihzana fareed)




Comments
Post a Comment