பௌத்த துறவிகள் மீதான ‘மரியாதை’ குறைந்துவிட்டது: ஞானசார

முன்னரெல்லாம் பௌத்த துறவிகளைக் கண்டால் அன்பு கலந்த பயமும் பக்தியும் இருக்கும் ஆனால் இப்போதெல்லாம் மக்களுக்கு பௌத்த துறவிகள் மீதான மரியாதை குறைந்து விட்டது என தெரிவித்துள்ளார் ஞானசார.
நேற்றைய தினம் புனானையில் முடக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு அவர் நிகழ்த்திய உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் சிங்கள சமூகம் அரசியல்வாதிகளின் பேச்சுக்கே அடிபணிவதாகவும் கட்சிகளே சமயங்களாக மாறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை முஸ்லிம்களைக் கேட்டால் தம்மை இணைப்பது தமது சமயமே என சொல்வார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இப்பிரச்சினையிலிருந்து சிங்கள மக்களை மீட்க வேண்டிய பொறுப்பு தம் போன்ற இளைய துறவிகளிடமே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நோக்கிய பயணம் பொலிசாரினால் தடுக்கப்பட்டிருந்த நிலையில் புனானை விகாரையில் ஞானசார குழுவினர் தரித்து நின்று தற்போது மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments