இறக்காமம் ஆஷா பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு
இறக்காமம் ஆஷா பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்வு ஆஷா பாலர் பாடசாலையின் ஆசிரியை திருமதி எம்.சப்றான தலைமையில் இறக்காமம் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்வி பணிப்பாளர் எஸ்.எல்.நிஸார், அம்பாரை மாவட்ட பாலர் பாடசாலையின் எஸ்.எம்.றிஸான், பெற்றோர்கள், மாணவர்கள், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.




Comments
Post a Comment